வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு

68

நமது நிருபர்




'எனக்கும், குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்; தங்குவதற்கு வீடின்றி இருப்பதால் நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதி வேண்டும்' என்று கோரி, நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நடிகை திரிஷாவுடன் ஜோடியாக விஜய் திருமண விழாவில் கலந்து கொண்ட நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் விஜய் மனைவி சங்கீதா கூறியிருப்பதாவது:
* என்னை வீட்டுக்குள் விஜய் அனுமதிக்க மறுக்கிறார். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும், குழந்தைகளுக்கு நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.



* வீடின்றி தவிக்கும் எனக்கு, விவாக ரத்து வழக்கு முடியும் வரை, சகல வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தங்க என்னை அனுமதிக்க வேண்டும்.


* இதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


* எனக்கும், குழந்தைகளுக்கும் சேர வேண்டிய சொத்துக்களை விஜய் நியாயமாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் விஜய் மனைவி சங்கீதா கூறி இருக்கிறார்.


சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாக ரத்து மனு, ஊடகங்களில் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து, திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார்.


அது குறித்த வீடியோவை கண்ட அவரது கட்சியினரும், ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஏராளமான கேலி, கிண்டல் விமர்சனங்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.

தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தற்போது சங்கீதா மீண்டும் மனு தாக்கல் செய்து இருப்பது விஜய்க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


@block_P@

ஏப் 20ல் விஜய் நீதிமன்றம் வருவாரா?

நடிகரும், தவெக தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஏப்ரல் 20ல் விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாரா அல்லது தனது தரப்பில் வழக்கறிஞர்களை அனுப்பி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.block_P


@block_G@

காதல் திருமணம்

பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சங்கீதா, 48. இவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த, தமிழ் திரைப்பட நடிகர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் நிச்சயதார்த்தம், 1998, ஜூலை 10ல் லண்டனில் நடந்தது; அங்கேயே பதிவு திருமணமும் செய்தனர். அதன்பின், 1999 ஆகஸ்ட் மாதம், சென்னையில் விஜய் - சங்கீதாவின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 25 வயதில் மகன், 20 வயதில் மகள் உள்ளனர். block_G

Advertisement