அரசு பேருந்துகளை நீட்டிக்க கிராமத்தினர் கோரிக்கை மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து மானாம்பதி, ஆலத்துார், அத்தி, காரணிமண்டபம் வழியாக இயக்கப்படும் டி34, டி35, டி67 ஆகிய அரசு பேருந்துகளை, உக்கம்பெரும்பாக்கம், பெண்டை வழியாக உக்கல் வரை நீட்டிக்க வேண்டும் என, இக்கிராமத்தினர், அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
மனு விபரம்:
காஞ்சிபுரத்தில் இருந்து மானாம்பதி, ஆலத்துார், அத்தி, காரணிமண்டபம் வரை தடம் எண் டி34, டி35, டி67 ஆகிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இக்கிராமங்களுக்கு அருகில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், பெண்டை அடுத்த உக்கல் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
ஆனால், உக்கம்பெரும்பாக்கம், பெண்டை, உக்கல் கிரமத்தில் உள்ள இக்கோவில்களுக்கு சென்றுவர நேரடி பேருந்து வசதி இல்லை. எனவே, கிராமத்தினர் நலன் கருதி, ஆக்கூர் கூட்ரோட்டில் இருந்து நேரடியாக கூழமந்தல் செல்லும் பேருந்துகளை, உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், பெண்டை வழியாக உக்கல் காமாட்சியம்மன் கோவில் வரை நீட்டிக்க அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்