ரூ.1.2 கோடியில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் திறப்பு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கூடலுார் நகராட்சியில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சி, 14வது வார்டு காமாட்சிபுரத்தில், 2023--24ம் ஆண்டில், 15வது நிதிக்குழு திட்டத்தில், ரூ.1.2 கோடி மதிப்பில் நகர்ப்புற சுகாதார நிலையத்துக்கு கட்டப்பட்ட கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் அறிவரசு, மாவட்ட சுகாதார அதிகாரி பாலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய நகர்ப்புற சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் மருத்துவ வசதி, ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை மையம், மருந்தகம், கர்ப்பிணி பெண்களுக்கு பிரத்யேக சிகிச்சை, கழிப்பிட வசதி ஆகியவை உள்ளன. மேலும், முதல் தளத்தில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
-
சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது; சொல்கிறார் ஜெய்சங்கர்
-
ரத்து செய்த துபாய் விமான சேவைகளை மீண்டும் துவங்கியது எமிரேட்ஸ்
Advertisement
Advertisement