கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நான்கு மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று (மார்ச் 07) தீர்ப்பு அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை அறிவித்தார்.
கோவை, பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ., 2ம் தேதி இரவில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
இவர்கள் மீது, டிச., 3 ல், முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, டிச., 19 ல் கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. ஜன., 9ல், 220 பக்கம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜன., 29 ல் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டு, பிப்., 2ல் சாட்சி விசாரணை துவங்கியது.
பிப்., 23 ல் சாட்சி விசாரணை நிறைவு பெற்றது. பிப்., 24 ல் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா, இறுதி வாதத்தை முன்வைத்தார். எதிர் தரப்பில் இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். அதன்படி மதியம் 3 மணி அளவில் தண்டனை விபரங்களை அவர் வெளியிட்டார். குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார்.
வாசகர் கருத்து (4)
Sudha - Bangalore,இந்தியா
07 மார்,2026 - 16:02 Report Abuse
இலவச சட்ட ஆலோசனை, அதுவும் பாலியல் குற்றத்திற்கு, இதுவல்லவா சமுதாய நலன் 0
0
Reply
கொடுங்கோலர்கள் - ,
07 மார்,2026 - 15:24 Report Abuse
தாமதிக்காமல் உடனே தூக்கில் போட வேண்டும். மேல் முறையீட்டு மனுக்கள் எல்லாம் ஒரு வாரத்தில் விசாரித்து தூக்கை உறுதி செய்ய வேண்டும் 0
0
Reply
PVSR - ,
07 மார்,2026 - 15:14 Report Abuse
நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொளல்ல வேண்டும். ஜெயில் தண்டனை கொடுத்து என்ன பயன். அரசுக்கு தான் தண்ட செலவு. 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
07 மார்,2026 - 14:46 Report Abuse
Please give them capital punishment and to be uted with in 90 days 0
0
Reply
மேலும்
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
-
சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது; சொல்கிறார் ஜெய்சங்கர்
Advertisement
Advertisement