திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாற்று கூட்டணி உருவாகவில்லை என சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திமுக குழுவினர் ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேசி கொண்டு இருக்கிறார்கள். எங்களையும் விரைவில் அழைப்பார்கள். கூட்டணி கட்சிகளிடையே சுமுகமான முறையில் போய் கொண்டு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு திமுக கூட்டணி கட்டுகோப்பாக இருக்கிறது. இதனால் புதிய பல கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை வலிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றன.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழகத்தில் மாற்று கூட்டணி இதுவரை உருவாகவில்லை. தமிழக மக்களின் ஆதரவோடு இந்த கூட்டணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும். விஜய் புகழ்பெற்ற நடிகர் என்பதால், ஊடகங்கள் அவருக்கு கூடுதலான முக்கியத்துவத்தை தந்து கொண்டு இருக்கின்றன.
அவரால் தமிழக அரசியல் தலை கீழாக மாற போகிறது என்ற தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் பிற மாநில மக்களை விட அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆகவே கடந்த காலங்களில் சினிமா என்கிற ஒரு மயக்கத்தில் தமிழக மக்கள் ஓட்டளித்தது போல, தற்போதை சுழலில் அப்படி ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
எந்த கூட்டணியும் மக்களுக்கு பயன் தராது. . நீயும் பயன் பட மாட்டாய்
என்னதான் சொன்னாலும் கட்சியை பார்த்து நடுங்குவது உண்மைதான்.
இவன் சொல்வது ஓரளவு உண்மை. ஏனென்றால் சுமார் 20-25 கட்சிகளை ஒட்டுப் போட்டு அதில் பட்டுப் பீதாம்பரம் செய்வதென்றால் சாமானியமான காரியமா. எனவே இந்தக் கூட்டணி போல் அமைப்பது என்பது கஷ்டம்தான்!
ஆனா , சாக்கிரதையா இருக்கனும் குமாரு, கட்சிங்க ஜாஸ்தி - ஆளாளுக்கு எனக்கு உனக்குன்னு போட்டி போட்டு பிளாஸ்டிக் சேருக்கும் பங்கம் வந்து விடப் போகிறது.
அடுத்த தமிழ் புத்தாண்டு பெயர் என்ன என்று தெரியுமா? பராபவம் - தோல்வி அவமானம் என்று பொருள் அது உங்கள் கூட்டணிக்கு என ஏற்கனவே தீர்மானம் செய்து வைக்க பட்டுள்ளது!
மத சார்பற்ற , சமூக நீதியை நிலை நாட்டும் திராவிட மாடல் ஜாதி கட்சி கூட்டு கொள்ளை , வெட்கக்கேடு , ஏன்யா நாங்குநேரி போய் இருந்தியே என்ன பிடுங்கின , உன் பின்னாடி சுத்தற ஆளுங்க தமிழ் மக்களை உருப்பட விட மாட்டானுங்க , வாழ்க திராவிட கூஜாக்கள்
எலக்ஷனில் பல்பு வாங்கும் போது இந்த டயலாக் ஐ சொல்லு பார்ப்போம்.....உடைஞ்ச பிளாஸ்டிக் சேர் & வேங்கை வயல் தண்ணீர்... உனக்கெல்லாம் வேறு எந்த தகுதி இரிக்கி?...
Your 4 seat plus box is confirmed and keep
Doing your speaker job, shame on you and cheating your own party cadres
இம்முறை திமுக வாங்கும் படுதோல்வி வரலாறு காணாமல் இருக்கும்
இவரோட சீட்ட புடுங்கி புதிய கட்சிகளுக்கு கொடுக்கப் போறார் ஸ்டாலின். அத எவ்வளவு சந்தோசமா புதுக்கட்சிகள் வந்திருக்குன்னு அண்ணன் பேட்டி கொடுக்கிறார். ரொம்பப் பெரிய மனசுன்னே உங்களுக்கு !
எடுப்பது பிச்சை...வாய் நீளம்.மேலும்
-
தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்