ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஜெருசலம்: ஈரான் மீது 80 போர் விமானங்களை அனுப்பி,. அலை, அலையாக தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கைகோர்த்து நடத்தும் தாக்குதல் இன்னும் ஓயவில்லை. ஈரானை தொடர்ந்து கியூபா மீது கவனம் செலுத்தப்படும் என்றும், ஈரான் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
டிரம்பின் அறிவிப்பு ஒரு பக்கம் இருக்கும் அதே நேரத்தில் தனது எதிர் தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களை முன்பை விட வேகப்படுத்தி உள்ளது. தற்போது ஒரே நேரத்தில் 80க்கும் அதிகமான போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பி, புதிய வகையான தாக்குதலை தொடர்ந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் உள்கட்டமைப்பை குறி வைத்து இந்த விமானங்கள், அலை, அலையாக தாக்குதல் நடத்தி இருக்கின்றன என்று இஸ்ரேல் கூறி இருக்கிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்பஹான் நகரில் உள்ள உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல்களினால் இஸ்பஹான் நகரில் 80 வீடுகள் சேதம் அடைந்தன,
டெஹ்ரான் அருகில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
It is a false message . Nowadays , enemy objects are identified by its thermal images and a drawing will not give any thermal damage . Do not be misguidedமேலும்
-
தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்