காங்., - தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தை... மல்லுக்கட்டு தமிழகத்தில் ஓய்ந்தது; புதுச்சேரியில் துவங்கியது
புதுச்சேரி: காங்., - தி.மு.க., கூட்டணி தொகுதி பங்கீடு பிரச்னை தமிழகத்தில் ஓய்ந்த நிலையில், இவ்விவகாரம் புதுச்சேரியில் பூதாகரமாகி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2004 லோக்சபா தேர்தலில் தொடங்கிய காங்.,- தி.மு.க., கூட்டணி கடந்த 2011 சட்டசபை தேர்தல்வரை நீடித்தது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக களம் காண்ட இரு கட்சிகளும், 2016 சட்டசபை தேர்தலில் மீ ண்டும் கூட்டணியில் இணைந்தன. இந்த கூட்டணி எதிர் வரும் தே ர்தலிலும் நீடிப்பது தமிழகத்தில் உறுதியாகி விட்டது.
இந்த கூட்டணிக்கு, கடந்த தேர்தல் வரை தமிழகத்தில் தி.மு.க.,வும், புதுச்சேரியில் காங்., கட்சியும் தலைமை தாங்கி வந்தன. அதன்படி புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கிய காங்., 15 தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும், கம்யூ., மற்றும் வி.சி.க., கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன. அதில், காங்., கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க., 6 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி பதவியையும் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் உரசல் நிலவி வருகிறது.
போட்டா போட்டி இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தி.மு.க., தலைமை வியூகம் அமைத்து 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணியாற்றி வருகி றது. அதே நேரத்தில், காங்., கட்சி கடந்த தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் பணியை மேற்கொண்டு வந்தது.
இவ்விரு கட்சிகளும் போட்டா போட்டியாக செயல்பட்டு வந்ததால், கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கேற்றார்போல் தமிழகத்திலும் இக்கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால், புதுச்சேரியில் இவ்விரு கட்சிகளும் தேர்தலை தனித்து களம் காண ஆயத்தமாகின.
இந்நிலையில், தமிழகத்தில் காங்., - தி.மு.க., இடையே நிலவி வந்த தொகுதி பங்கீட்டு பிரச்னை, நீண்ட இழுபறிக்கு பின் கூட்டணிக்கு தலைமை தாங்கிய தி.மு.க., காங்., கட்சிக்கு 28 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட்டு ஒதுக்கியதை தொடர்ந்து கூட்டணி கு ழப்பம் முடிவுக்கு வந்தது.
இதனால், புதுச்சேரியிலும் காங்., - தி.மு.க., கூட்டணியை தொடர இவ்விரு கட்சிகளின் உயர்மட்ட தலைமை முடிவு செய்துள்ளது.
காங்., ஆலோசனை அதனைத் தொடர்ந்து நேற்று புதுச்சேரிக்கு வடருகை தந்த காங்., கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமில்கர் ஆகியோர், நிர்வாகிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து கருத்து கேட்டனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், இந்த கூட்டணி துவங்கிய காலத்தில் இருந்து தமிழகத்தில் தி.மு.க.,வும், புதுச்சேரியில் காங்., கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கி வருகிறது. அதன்படி வரும் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிக்கு தி.மு.க, தலைமை தாங்குவது உறுதியாகிவிட்டது. அதேபோல், புதுச்சேரியில் காங்., கட்சி தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும். கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தலில் பின்பற்றி தொகுதி பங்கீட்டு பார்முலாவை பின்பற்றி வரும் தேர்தலில் காங்., கட்சி குறைந்தது 21 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும். மீதமுள்ள 9 தொகுதிகளை தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.
கடந்த தேர்தல் நேரத்தில் காங்., கட்சியில் இருந் து பலர் மாற்றுக் கட்சிகளுக்கு ஓடியதால், காங்., தொகுதிகளை தி.மு.க.,விற்கு விட்டு கொடுத்தோம். ஆனால், தற்போது நிலமை மாறியுள்ளது. அதனால், காங்., கட்சிக்கு சாதகமான தொகுதிகளை எக்காரணத் தை கொண்டும் விட்டுக் கொடுக் கக்கூடாது என்றனர்.
தி.மு.க., ஆலோசனை காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதை அறிந்த தி.மு.க.,வினரும், மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், காங்., கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். மேலும், மாநிலத்தில் தி.மு.க., வளர்ந்துள்ளது. பழைய பார்முலாவை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால், வரும் தேர்தலில் தி.மு.க., கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும்.
தி.மு.க., மற்றும் காங்., தொகுதி பங்கீட்டை முடித்துக் கொண்டு கம்யூ., மற்றும் வி.சி.க.,விற்கு தங்கள் தொகுதிகளில் இருந்து பிரித்து கொடுக்க கட்சி தலைமையை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.
காங்., அழைப்பு ஆலோசனை கூட்டம் முடிந்ததும், காங்., கட்சியினர் கிரீஷ் சோடங்கள் தலைமையிலேயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து, தி.மு.க.,வினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
தி.மு.க., மறுப்பு ஆனால், தி.மு.க.,வினர் அதனை மறுத்து பேச்சுவார்த்தைக்கு தங்கள் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதற்கு காங்., கட்சியினர் நாளை (இன்று) பேசலாம் என்றனர். அதற்கு தி.மு.க.,வினர் நாளை எங்களுக்கு வேலை உள்ளது. மேலும், 9ம் தேதி திருச்சி மாநாடு வேலை உள்ளது. மாநாடு முடிந்த பின் பேசலாம் என கூறியுள்ளனர்.
எதிர்பார்ப்பு இரு கட்சிகளும், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
மேலும்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
-
சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது; சொல்கிறார் ஜெய்சங்கர்
-
ரத்து செய்த துபாய் விமான சேவைகளை மீண்டும் துவங்கியது எமிரேட்ஸ்