புதிய வீடு கட்டும் போது கழிவுநீர் வடிகால் அமைப்பதில் கவனமாக இருக்கணும்!
புதிதாக வீடு கட்டும் போது கட்டடம் உறுதியாக இருந்தால் மட்டும் போதாது. அந்த கட்டடத்தை பயன்படுத்துவதற்கான அடிப்படை வசதிகள் முறையாக அமைய வேண்டும் என்பதிலும் கவனமாக செயல்பட்டாக வேண்டியது அவசியமாகிறது.
பொதுவாக, ஒரு நிலத்தை தேர்வு செய்து அதில் வீடு கட்டும் போது, நிலத்தடி நீரை எப்படி எடுப்பது அதை வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தேவை அடிப்படையில் எப்படி வினியோகிப்பது என்று பார்க்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பது அவசியம்.
இதற்கு அடுத்தபடியாக அந்த கட்டடத்தில் கழிவுநீர் வடிகால் அமைப்பை முறையாக திட்டமிட வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் இதில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதே தெரியாத நிலையில் இருக்கின்றனர்.
நீங்கள் வீடு கட்டுவதற்காக தேர்வு செய்த நிலம், அமைந்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளதா என்று பாருங்கள். அந்த திட்டத்துக்கான இணைப்பு உங்கள் மனை அமைந்துள்ள தெருவுக்குள் வந்துள்ளதா என்றும், அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இணைப்து வழங்கப்பட்டுள்ளதா என்றும் பாருங்கள்.
குறிப்பாக, வீட்டில் இருந்து பாதாள சாக்கடை அமைப்புக்கு எந்த வகையில் குழாய் இணைப்புகள் கொடுக்க வேண்டும் என்பதையும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களிடம் விசாரித்து கொள்ள வேண்டும். சில இடங்களில் ஒரு தெரு அல்லது குறிப்பிட்ட சில வீடுகள் மட்டும் பாதாள சாக்கடை இணைப்பு இன்றி காணப்படும்.
இது போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் தவிர்க்க முடியாத சூழலில், தற்காலிக அடிப்படையில் செப்டிக் டேங்க் அமைக்க வேண்டிய தேவை இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம்.
பாதாள சாக்கடை கட்டமைப்பு இல்லாத பகுதி என்றால், அங்கு வீடு கட்டும் போது, செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர் தொட்டி அமைப்பது அவசியம். இத்தகைய தொட்டிகளை கட்டுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
குறிப்பாக இதில் எந்த நிலையிலும் நீர்க்கசிவு ஏற்படாத வகையில் உரிய தடுப்பு முறைகளை எவ்வித சமரசமும் இன்றி செயல்படுத்த வேண்டும். சமீபகாலமாக, வீடுகளில் முன்புறத்தில் ஒரு பகுதியில் கழிவுநீர் தொட்டியும், அதன் பக்கத்தில் கீழ் நிலை தண்ணீர் தொட்டியும் அமைக்கப் படுகிறது.
இது போன்ற இடங்களில் நீர்க்கசிவு காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வீடுகளில் கழிவறை நீர், சமையலறை நீர் ஆகியவற்றை பிரித்து முறையாக கையாள்வதற்கான வசதியை செய்ய வேண்டும்.
கழிவுநீர் வடிகால் அமைக்கும் போது அதை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்கும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் வசதிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
வீட்டில் இருந்து பாதாள சாக்கடை அமைப்புக்கு எந்த வகையில் குழாய் இணைப்புகள் கொடுக்க வேண்டும் என்பதையும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களிடம் விசாரித்து, அதன்படி செய்ய வேண்டும்
மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்