கட்டுமான பணியில் மேல்தளத்துக்கான செலவை கணக்கிடுவது எப்படி?
புதிதாக கட்டடம் கட்டும் போது அதற்கான பணிகளை துவக்கும் முன் செலவுகள் குறித்து பட்ஜெட் போடுவது அவசியம். இதில் ஒட்டுமொத்த பார்வையில் கட்டுமான பொறியாளர்கள் ஒரு உத்தேச பட்ஜெட் பட்டியல் வைத்து இருப்பார்கள்.
இந்த உத்தேச பட்ஜெட் அடிப்படையில் பார்த்தால் கட்டுமான பணிக்கான மொத்த செலவு விபரங்கள் குறித்த ஒரு மதிப்பீடு கிடைக்கும். கட்டடத்தின் ஒவ்வொரு பாகத்துக்கான கட்டுமான செலவுகளை தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இதன்படி, கட்டடத்தில் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள் அமைப்பது, சுவர் கட்டுவது மற்றும் பூச்சு வேலை, மேல் தளம் அமைப்பது ஆகியவற்றுக்கு தனித்தனியாக பட்ஜெட் போட வேண்டியது அவசியமாகிறது. இதில் கட்டடத்தின் மேல் தளம் அமைக்கும் பணிக்கான கட்டுமான செலவு உத்தேசமாக எவ்வளவு ஆகும் என்பது மிக பெரிய கேள்வியாக எழுகிறது.
உதாரணமாக, 1,200 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடத்துக்கு மேல் தளம் அமைப்பதாக வைத்து கொண்டால் அதற்கு கட்டுமான செலவு என்னவாகும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் மேல் தள ஸ்லாப் தடிமன் ஐந்து அங்குலமாக இருக்க வேண்டும்.
மேல் தள ஸ்லாப்பை தாங்கும் பீம்களின் நீளம், 270 அடியாகவும், அதன் தடிமன் ஒரு அடியாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதில் எட்டு முதல், 16 மி.மீ., வரையிலான டி.எம்.டி., கம்பிகளை பயன்படுத்த வேண்டும், எம்-20 வகை கான்கிரீட்டை பயன்படுத்த வேண்டும்.
இந்த அளவுகள் மற்றும் வரையறைகள் அடிப்படையில் அதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கான செலவுகளை பார்க்க வேண்டும். இதில், 130 மூட்டை சிமென்ட் தேவைப்படும் என்பதால், ஒரு மூட்டைக்கு, 310 ரூபாய் என விலை வைத்தால், 40,300 ரூபாய் இதற்கு செலவாகும்.
இதில் கலவை தயாரிப்பதற்கான எம் சாண் பயன்படுத்துவதாக வைத்து கொண்டால், 3 யூனிட் எம் சாண்ட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை, 7000 ரூபாய் என்ற அடிப்படையில் பார்த்தால், 21,000 ரூபாய் எம் சாண்ட் வாங்க செலவாகும்.
இதில், ஒரு பங்கு சிமென்ட், மூன்று பங்கு மணல் என்றால், ஐந்து பங்கு கருங்கல் ஜல்லிகளை சேர்க்க வேண்டியது அவசியமாதகிறது. இதன்படி, கான்கிரீட் கலவையில், ஐந்து யூனிட் கருங்கல் ஜல்லிகள் பயன்படுத்த, 30,000 ரூபாய் செலவாகும்.
இதற்கு அடுத்தபடியாக டி.எம்.டி., கம்பிகளுக்கு, 1.30 லட்ச ரூபாய், மின்சார இணைப்புக்கான ஒயரிங் குழாய்கள் அமைக்க, 8 முதல், 10,000 ரூபாய் செலவாகும். இந்த அடிப்படையில் பொருட்களுக்கான மொத்த செலவு, 2.15 லட்ச ரூபாயாகவும், பணியாளர் செலவு, 1.24 லட்ச ரூபாய் என மொத்தம், 3.50 லட்ச ரூபாய் வரை செலவாகும்.
இந்த அடிப்படையில் மேல் தளத்துக்கான உத்தேச பட்ஜெட் போட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.
கட்டடத்தில் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள் அமைப்பது, சுவர் கட்டுவது மற்றும் பூச்சு வேலை, மேல்தளம் அமைப்பது ஆகியவற்றுக்கு தனித்தனியாக பட்ஜெட் போட வேண்டியது அவசியமாகிறது.
மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்