மேல்தளத்தின் உட்புறத்தில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தால் என்ன செய்வது?
வீட்டுக்கான கட்டடத்தை கட்டும் போது அதில் ஒவ்வொறு பாகமும் உறுதியாக இருக்க வேண்டும் என்று தான் உரிமையாளர்கள் நினைப்பர்கள். இதே போன்று தான் அந்த பணியை ஏற்றுள்ள ஒப்பந்ததாரரும், பணியாளர்களும் கட்டடணம் தரமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பர்.
தங்களால் கட்டப்படும் கட்டடம் தரம் குறைந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பணி நிலையில் ஏற்படும் சில கவன குறைவுகள் காரணமாக கட்டடத்தில் குறைபாடுகள் வருகின்றன.
இதில் பெரும்பாலான கட்டடங்களில் சுவர்களில், இணைப்பு பகுதிகளில் மேற்பூச்சில் ஈரம்வெளிப்படுதல், விரிசல்கள் ஏற்படுவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய குறைபாடுகளை முறையாக ஆய்வு செய்து சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், சமீப காலமாக சில கட்டடங்களில் மேல் தளத்தின் உட்புற பகுதி காரைகள் பெயர்ந்து விழுவதை பார்க்க முடிகிறது. ஒருசில இடங்களில் இந்த கான்கிரீட் காரைகள் பெரிய அளவில் பெயர்ந்து விழும் நிலையில் அங்கு வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு கட்டடத்தின் உறுதித்தன்மைமை நம்பி அதில் வசிப்போது இப்பிரச்னை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது போன்று காரைகள் பெயர்ந்து விழாமல் தடுப்பதற்கான வழிமுணைகள் என்ன என்பதை வெளிப்படையாக பொறியாளர்கள் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
இந்த விஷயத்தில் முதலில் கட்டடத்தில் மேல் தளத்தின் உட்புற கான்கிரீட் காரை பெயர்ந்து விழுவதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்க வேண்டும். பொதுவாக, பெரும்பாலான கட்டடங்களில் சுவர்களில் உட்புறம், வெளிப்புற பூச்சு வேலையில் தான் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
கான்கிரீட் தளத்தின் உட்புறம், வெளிப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய பூச்சு வேலையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இந்த பாகத்துக்கான பூச்சு வேலைக்கான கலவை எப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் சிமென்ட், மணல் விகிதங்கள் சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன், பூச்சு வேலையின் போது சிமென்ட் கலவை என்ன தடிமனில் இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் பூசப்படும் கலவை, புவியீர்ப்பு விசைக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதால் அதன் தடிமன் அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
பூச்சு வேலையில் தடிமன் தேவையின்றி அதிகமாக இல்லாமல் பார்த்துகொள்வது அவசியம். சரியான முறையில் தயாரிக்கப்படும் கலவை, பூச்சின் தடிமன் இரண்டிலும் கவனமாக இருந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
பூச்சு வேலையின் போது சிமென்ட் கலவை என்ன தடிமனில் இருக்க வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும், இங்கு மேற்பூச்சு தடிமன் அதிகரித்தால் அது பெயர்ந்து விழ வாய்ப்பு ஏற்படும்.
மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்