இஸ்ரேலுக்கு ரூ.1,388 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: இஸ்ரேலுக்கு ரூ.1,396 கோடி மதிப்பிலான அவசர ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8வது எட்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்காசியாவில் ஏற்பட்ட இந்த மோதல், தற்போது வளைகுடா நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்பட பல அரபு நாடுகள் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
தங்களின் நட்பு நாடுகளான அரபு நாடுகளின் ராணுவ தளங்களைப் பயன்படுத்தி, ஈரானில் உள்ள பள்ளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அபாஸ் அராச்சி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சரணடைவது தான் ஈரானுக்கு ஒரே தீர்வு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ரூ.1,388 கோடி மதிப்பிலான அவசர ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், "இஸ்ரேலுக்கு உடனடியாக ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு முக்கிய பிராந்திய கூட்டாளியின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு இலக்குகளுக்கு ஆதரவு கிடைக்கும்," என்று கூறியுள்ளார்.
மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்