இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி; சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் சரிவு

4

நமது நிருபர்



மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் எதிரொலியாக, வார தொடக்க முதல்நாளில் இன்று (மார்ச் 09) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்து வர்த்தகம் ஆகி வருகிறது.



மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,225 புள்ளிகள் குறைந்து 76,693 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் நிப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.


அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் எதிரொலியாக ஜப்பான், தென்கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம் ஆகி வருகிறது.


ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டி 110 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்ந்து நடைபெற்றால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 150 டாலரை தாண்டிவிடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement