காட்டு யானை தாக்கி இருவர் பலி
கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ரவி, அப்பி ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை காரக்குன்னு அருகே, காட்டு யானை தாக்கி, மாணிக்கல்லாடி பகுதியை சேர்ந்த ரவி, 55, அப்பி, 65 ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் குடியிருப்போர் அச்சம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான பேர் திரண்டுள்ளனர்.
காட்டு யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement