திருச்சியில் 12 வது திமுக மாநில மாநாடு ; முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்

4

திருச்சி: திருச்சி மாவட்​டம் சிறுக​னூரில் இன்று திமுக சார்பில் 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முக்​கிய தேர்​தல் வாக்​குறு​தி​களை தி.மு.க. தலை​வரும், தமிழக
முதல்​வரு​மான ஸ்​டா​லின் வெளி​யிட உள்ளார்.


சட்​டசபை தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில், 'ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு
வெல்​லட்​டும்' என்ற தலைப்​பில் திருச்சி சிறுக​னூரில் தேர்​தல் அரசி​யல் மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. இதற்​காக திமுக முதன்​மைச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான நேரு தலை​மை​யில் பிரம்​மாண்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.


சிறுக​னூர் மாநாட்​டுக்​காக 700 ஏக்​கரில் மாநாட்டு வளாகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில், 200 ஏக்​கரில் மாநாட்டு அரங்​க​மும், 240 அடி நீள பிரம்​மாண்ட மேடையும் பிரம்​மாண்ட எல்​இடி திரை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதுத​விர, மாநாட்​டுத் திடலில் 168 இடங்​களில் எல்​இடி திரைகள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. கோட்டை வடி​வில் 1,000 அடி நீளத்​துக்கு பிரம்​மாண்ட முகப்பு அமைக்​கப்​பட்டு ஈவெரா, அண்​ணாதுரை, கருணாநி​தி, ஸ்டா​லின், உதயநிதி ஆகியோரது படங்​கள் இடம்
பெற்​றுள்​ளன.


மாநாட்​டில் 3.60 லட்​சம் நாற்​காலிகள் போடப்​பட்​டுள்​ளன. 48 நுழைவு​வா​யில்​கள்
அமைக்​கப்​பட்​டுள்​ளன. மாநாட்​டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்​டில் அடங்​கிய பை வழங்​கப்​படு​கிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்​சம் பேருக்கு உணவு வழங்​க​வும் ஏற்​பாடு
செய்​யப்​பட்​டுள்​ளது. மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் ஸ்​டா​லின் சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் இன்று திருச்சி வரு​கிறார்.


மாநாட்டு வளாகத்​தின் முகப்பில் உள்ள 100 அடி உயர கொடிக்​கம்​பத்​தில் கட்​சிக் கொடியை ஏற்​றி விட்டு அரங்கிற்குள் செல்​கிறார். அங்​கிருந்து 600 அடி நீள ரேம்​பில் நடந்து மேடைக்​குச்
செல்​கிறார். 2021ம் ஆண்டைப்போல இந்த மாநாட்​டிலும் முக்​கிய அறி​விப்​பு​களை முதல்​வர்
வெளி​யிட உள்​ளார்.

Advertisement