மேற்காசிய நிலவரம் என்ன? ராஜ்யசபாவில் விளக்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
புதுடில்லி: மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு, இன்று (மார்ச் 09) காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபாவில் மறைந்த எம்பிக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. ராஜ்யசபாவில் டி-20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியினருக்கு அவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்., ராஜ்யசபா தலைவர் கார்கே கேள்வி எழுப்பினார். பின்னர் மேற்காசிய நிலவரம் குறித்து ஜெய்சங்கர் அளித்த விளக்கம்:
* மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். அதைத்தான் இந்திய சார்பில் வலியுறுத்தி உள்ளோம்.
* மேற்காசிய நிலவரம் குறித்து பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். பதட்டங்களை தணிக்கவும், அடிப்படை பிரச்னைகளையும் தீர்க்கவும் வலியுறுத்தி இருக்கிறோம்.
* கச்சா எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
* ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து தூதரகம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
* சிறப்பு விமானங்கள் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.
* ஈரான் - இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா விரும்புகிறது. போர் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
* இது வெறும் ஈரான் -இஸ்ரேல், அமெரிக்க போர் மட்டும் கிடையாது அந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
* எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் வராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
* மேற்காசிய நிலைமை கவலைக்குரியது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்தி உள்ளோம்.
* அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டியது அவசியமாகும்.
* வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்திய குடிமக்கள் வசித்து வேலை செய்கிறார்கள். ஈரானிலும், படிப்பு அல்லது வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் அங்கு உள்ளனர்.
* அங்கு இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அரசு கவனித்து வருகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
எந்த ஒரு உலக பிரச்சனையிலும், நம் ஒன்றியம் ரஷ்யா-சீனா எடுக்கும் முடிவை எதிர்க்காமல் அவர்களோடு உறுதியாக நிற்பது தான் சரி
திரு ஜெய்ஷ்ங்கர் கருத்து சொல்றதுக்கு கூட அமெரிக்கா கிட்ட கேட்டுட்டு தான் பதில் சொல்லுவாரு போல ...
இந்திரா காந்தி காலத்தில் சோ ராமசாமி இந்தியாவின் தலைநகரம் மாஸ்கோன்னு ஒரு தொடர் கட்டுரையை முழு ஆதாரங்களுடன் வெளியிட்டார். நமது தலைநகரம் மாஸ்கோ இப்போது புத்தகமாக கிடைக்கிறது. நம்நாட்டின் உண்மையான கொள்கை முடிவுகள் சோவியத் ரஷ்யாவின் மாஸ்கோவில்தான் எடுக்கப்படுகின்றனவா என்ற தொனியில் விமர்சித்திருந்தார்.
இது சோனியா காங்கிரஸ் கிடையாது. சுயசார்பு மோடி இந்தியா. அரசியலை விட்டு புரிந்து கொள்ள வேண்டும்
To reduce dependency for Gas on Foreign countries, Indian Government should encourage fuel switching to Electricity, which is available without shortage, within the country. Both Central Government and State Government should initiate steps to offer Induction Stove to all households, free of cost. Induction stove manufacturers within India can be encouraged to ramp up their production quickly. If we start today, it is possible to have Indian made Induction stove in all houses in 5 years, by end of year 2030. Electricity network for rural India may require strengthening to accommodate this additional load, which also can be done within this period. It is possible to replace major part of gas/kerosene/wood used for cooking through Electricity cooking.
சாப்பாட்டு நினைப்பு ...பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு என்ன சாதித்து விட்டது ..டீ காப்பி கூட போட்டு கிடைக்க பிரயோஜனமில்லை ?
Hope you know about, installation of solar electricity generation units on subsidy for households. Nowadays almost all cooperative societies provide hot water produced using solar panels for bathing. This saves electricity. I hope you know about cobar gas generation in villages using wastes generated by animals and trees. That is used for electricity for lighting and cooking gas. Dont suggest and expect anything free from Government, except education and health care. If these two things are given to each and every citizen, they will take care of everything on their own, without expecting anything free of cost, from anyone including the Government. In short, dont give anything to anyone free of cost, but empower them to earn everything by themselves by providing them good education and health.
Aluminium vessels can not be used directly in induction stoves.the induction stove consumes more power.Solar water heaters can be used for hot water in kitchen.Microwave oven can also be used in certain applications.மேலும்
-
தம்பிதுரை கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
-
நான் வெறுக்கிறேன்; அருவருக்கிறேன்; தவெக அறிவிப்புகள் குறித்து சீமான் கருத்து
-
முதல்வர் ஸ்டாலின் ஆண்டதும் போதும்; மக்கள் மாண்டதும் போதும்; இபிஎஸ் காட்டம்
-
வியாபாரியை கார் ஏற்றி கொல்ல முயன்ற அ.தி.மு.க., நிர்வாகி கைது
-
தவறுதலாக வெடித்த துப்பாக்கி மான் வேட்டைக்கு சென்றவர் பலி
-
வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் பலி