நான் வெறுக்கிறேன்; அருவருக்கிறேன்; தவெக அறிவிப்புகள் குறித்து சீமான் கருத்து
சென்னை: தவெக தலைவர் விஜயின் மகளிர் சார்ந்த வாக்குறுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தவெக மகளிர் சார்ந்த அறிவிப்புகள். இது போன்ற முறையை நான் வெறுக்கிறேன், அருவருக்கிறேன். இது வந்து ஒரு ஆட்சியே கிடையாது. இது ஒரு வியாபாரம். மக்களுக்கு ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என்று சொல்வோம் என்கிற மாதிரி திட்டம் ஆடி தள்ளுபடி மாதிரி. ஏற்கனவே 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது.
ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டி இருக்கிறது. இப்படியே வாங்கி, வாங்கி தாலிக்கு தங்கம் இலவசம், இது இலவசம், இது இலவசம் என்று சொல்லிக்கொண்டே போனால் கடைசியாக நாடு வந்து ஒரு நாள் ஏலத்திற்கு வரும். மதுவை ஒழிப்பேன் என்று சொல்ல முடியவில்லை, மதுவை ஒழிக்காமல் சட்டம் ஒழுங்கு என்பது வெட்டி பேச்சு அது ஏமாற்றுப் பேச்சு. விஜய்க்கு தனித்த தத்துவமோ, கோட்பாடோ, பாதையோ கிடையாது. மகளிருக்கு 2,500 ரூபாய் கொடுப்பதாக கூறியது திரைப்பட காமெடி போல 'FLOP 'ஆகும்.
சினிமா வேறு, சித்தாந்தம் வேறு; இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இலவசம் என்றால் எந்த பொருள் பொறுப்பற்று போய்விடும். பொருளின் அருமை கிடையாது. தாய்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் நீ மதிக்க மறுக்கிறாய். பூமி காலுக்கு கீழ் மிதிப்படுவதால் மதிப்பதில்லை. அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும் தான் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் இலவசமாக இருக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக, திராவிட கட்சிகள் திறந்த மதுக்கடைகளால், தமிழ் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. குடும்பத்தை காக்க வேண்டிய ஆண்களோ, குடித்து அற்ப ஆயுளில் மடிகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆயிரமாயிரம் பெண்கள் இளம் வயதிலேயே விதவைகளாகி, வாழ்க்கையில் கடும் துயரங்களை அடைந்து வருகின்றனர். தேர்தலில் இலவசங்களை வாரி வழங்குவதாக கூறும் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாராய கடைகளை மூடி, தமிழகத்தில் உள்ள தாய்மார்களை காப்போம் என்ற உறுதி மொழியை அளிக்க தயங்குவது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
தன்னுடைய கருத்துக்களை மிக மிக துணிவாக வெளிப்படுத்தும் சீமானை கண்டால் ஊழல் அரசியல் நடத்தும் விடியல் போன்ற கோமாளிகளுக்கு பிடிக்காது தான் .நடிகர் விஜய் அவர்களும் தி மு க வை போன்று நம் தாய் தமிழை இழிவு படுத்திய பிடித்து தொங்குகிறார் .
இந்த விடியல் போன்ற அரசியல் வாதிகள் தங்கள் சொந்த நலனுக்கு மட்டுமே உண்மையாக இருப்பார்கள். விடியல் குட்டையில் தேடி கொள்கைகளை
அவன் நம்பர் ஒன் டுபாக்கூர் என்றால், நீ நம்பர் டூ டுபாக்கூர்.
Whether I like Mr. Seeman or not what he says is 100% correct.No Free bees except for education and health
சைமனுக்கு ஒரு விஷயம் புரிஞ்சிருக்கான்னே தெரியலை. டாஸ்மாக்கில் கவர்மெண்ட் பணம் 40% சைடில் போகிறதுன்னு ஆக்டர் விஜய் சொல்றானே.அதை கவர் மெண்டுக்கு கொண்டு வந்தால் இந்த இலவசமேல்லாம் ஜுஜுபி. முகஸ் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் குடுக்கும் போதும் இப்போ திடுதிப்பென்று கோடை மழைன்னு இரண்டாயிரம் ரூபாய் குடுத்த போதும் எடப்பாடி மாதம் இரண்டாயிரம் ரூபாய் மற்றும் ஓரே தடவை பத்தாயிரம் ரூபாய் குடுப்பேன்னு சொன்ன போதும் வாய் பூட்டு போட்டு கொண்டிருந்த முகஸ் ஃபாலோயர்ஸ் மற்றும் எடப்பாடி ஃபாலோயர்ஸ் இந்த ஆளு சொன்னதுக்கு ஏன் குதிக்கிறாய்ங்க. இலவசம் எல்லா ரூபங்களிலும் ஒழிக்கப்பட வேண்டும். மாற்று கருத்தில்லை. எடப்பாடி கூட அறிவிப்பு செய்தார். ஆனால் 40% பணம் பகல் கொள்ளையை கஜானாவில் சேர்ப்பேன்னு அறிவிக்கலை.
எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் கூறும் தரமான கல்வி தரமான மருத்துவ சேவைகள் தரமான குடிநீர் இவைகளை இலவசமாக வழங்குவது அரசின் தலையாய கடமை என்பதை ஆதரிக்கிறேன். இவைகள் இன்று கார்பொரேட்கள் கைகளில் பெரிய வியாபாரக் கொள்ளையாகிவிட்ட நிலையில் எந்த அரசியல் கட்சியும் இதைப்பற்றி யோசிப்பது கூட இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.
பாவம் விஜய் எழுதிக் கொடுத்ததை படிக்கிறார் பொது அறிவு நாட்டின் நிலைமை புரியாமல் திராவிட கட்சிகள் சொன்ன வாக்குறுதிகளை மறுபடியும் சொல்கிறார் தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு என்று தெரியுமா