தம்பிதுரை கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுக எம்.பி., தம்பிதுரை குடும்பத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், பொது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என திருவள்ளூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கோணாம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் ஜி.கருணாநிதி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்த மனு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு, நாராயணபுரம் போன்ற கிராமங்களில், அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களும், பள்ளி மற்றும் கல்லுாரிகளை கட்டி உள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், பொறியியல் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை உள்ளன. அதிமுக, எம்.பி., தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
வருவாய் ஆவணங்களில், நீர் பிடிப்பு, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, மாணவ - மாணவியருக்கான கல்லுாரி விடுதிகள், பயிலகம், துணைமின் நிலையம், கல்லுாரி பஸ்களை நிறுத்த தனி சாலை போன்றவற்றை அமைத்து உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு முதல், பொது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, கடந்த பிப்.10 ல் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்த சர்வே அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்து, இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, கலெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கலெக்டர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும்,' என திருவள்ளூர் கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தியாவில் முதன் முதலில் குடும்ப அரசியலை அறிமுக படுத்தியவர் MGR தான் , அவர் இறந்த பிறகு ஜானகி , அடுத்து ஜெயாலலிதா முதல்வர் ஆக்கி குடும்ப அரசியலை உருவாக்கிய கட்சி ADMK
ஒரு எம் பி என்ன செய்ய வேண்டுமோ அதை தானே தம்பிதுரை செய்து இருக்கின்றார்.
MGR காலத்தில் ஜேப்பியார் VT யூனிவர்சிட்டி வேல்ஸ் யூனிவர்சிட்டி MGR யூனிவர்சிட்டி RMK , ராமச்சந்திர இப்படி எல்லா கல்வி தந்தை உருவாக்கம் இது தான் MGR ஊழல் அற்று செய்த ஆட்சி
சிறுபான்மை என்ற போர்வையில் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. பாவமும் மன்னிக்கப்படும்.
மதுரை தயா கல்லூரி ஆக்கிரமிப்பை பற்றி எப்போ எசமான் கண்திறப்பீங்க.
ஆகிரமிப்பு என்பது கிரிமினல் trespass என்பர்களே .அப்படி இருக்கும்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட கானோமே . அது ஏன் ?
அதேபோன்று கோயில்நிலங்கள் பல ஆயிரம் கோடிக்கு மீட்கப்பட்டதாக கூறும் அரசு அதனால் ஹிந்து அறநிலைய சட்டம் 1959 இன் படி குறைந்தது 5 வருடம் ஜெயிலுக்கு அனுப்பி இருக்கவேண்டுமே .இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் காணோமே .அதனால் தான் நீதித்துறையின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது .
திராவிட அரசியல் பின்புலம். சிறுபான்மை அந்தஸ்து. வாக்கு வங்கி. அரசு நீர் பிடிப்பு நிலம் மீது கட்டிடங்கள். அதில் மாணவர்கள்.? 12 வாரத்தில் எப்படி மீட்க முடியும்? 2001 முதல் ஆக்கிரமிப்பு.
கல்வி நிறுவனங்கள் மொத்தம் அரசுடமை. அரசு நிர்ணயிக்கும் விலை. தமிழகம் நிதி இல்லை என்றால், பிற மாநில மத்திய அரசு விருப்பம். இறுதியில் கட்சி, மதம் சாராத தனியார் எடுக்க வேண்டும். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
அங்குள்ள நீர் பிடிப்பு அளவு புதிய இடத்தில் சொந்த செலவில் பங்குதாரர்கள் ஏரி அமைக்க வேண்டும். 2001 குடியிருந்த மக்கள் அனைவருக்கும் வாழ்வாதார தொகை தர வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து கல்லூரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இல்லை என்ற சான்று மாவட்டம் தர வேண்டும்.
இவரைத்தான் MP ஆக தேர்வு செய்துள்ளார்கள்
This matter should be debated in Rajya Sabha.
சாஸ்தா கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்டுவிட்டார்களா .....அப்படிதான் இங்கும் செய்வார்கள் . ..