நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்தை கண்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த சனிக் கிழமை, ஆபரண தங்கம் கிராம் 15,050 ரூபாய்க்கும், சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
ஞாயிற்றுக் கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை; அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 14,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 1,19,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நேற்று தங்கம் விலை குறைந்துள்ளது இன்று அதிகரித்துள்ளது இதனால் எந்த நலனும் மக்களுக்கு இல்லைமேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்