சிலிண்டர் தட்டுப்பாடு பரோட்டோ விலை விர்...

ராமநாதபுரம்: ஈரான் போர் காரணமாக நம் நாட்டில் வணிக காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு தமிழகத்தில் அதன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பலரும் விறகு அடுப்பிற்கு மாறுவதால் விறகு விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.150க்கு விற்கப்பட்ட விறகு, தரத்திற்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.250 வரை விலை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகார்த்திகேயன் கூறுகையில் வணிக காஸ் தட்டுப்பாட்டால் 2, 3 நாட்களில் ஓட்டல்களை மூடவேண்டிய நிலையில் பலரும் உள்ளனர். பரோட்டா விலையை மட்டும் ரூ.15ல் இருந்து 20 ஆக உயர்த்தியுள்ளோம். பிற உணவுப் பொருட்களின் விலையை கடையின் தரம், தன்மைக்கு ஏற்ப உயர்த்தலாம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். காஸ் தட்டுப்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.

Advertisement