24 மணி நேரத்திற்கு தான் ஓட்டல்களில் காஸ் பயன்படுத்த முடியும் பரமக்குடியில் விக்கிரமராஜா பேட்டி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 43வது வணிகர் தின மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:

ஈரான் போர் காரணமாக காஸ் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக் கிறோம். பிரதமர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து முறையிட்டு உள்ளோம். காஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் பொருள்களின் தயாரிப்பை குறைத்துள்ளோம். 24 மணி நேரத்திற்குத் தான் காஸ் பயன்படுத்த முடியும்.

பழைய முறைப்படி கரியை பயன்படுத்த முடியாது. தமிழகத்தில் பல லட்சம் மக்கள் ஓட்டலில் சாப்பிடும் நிலை உள்ளது. இட்லி, சாப்பாடு உள்ளிட்டவை செய்ய முடியும். தோசை உள்ளிட்ட பொருட்கள் செய்ய முடியாது. ஓட்டல்களை மூடினால் வேலை ஆட்களை மீண்டும் இணைப்பது கடினம்.

எனவே மத்திய, மாநில அரசுகள் காஸ் தட்டுப்பாட்டை விரைந்து சரி செய்ய வேண்டும். ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்வால் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.

தற்போது மேலும் உயர்த்த வேண்டாம் என கூறியுள்ளோம். மக்களும் வீடுகளில் சிலிண்டர்களை வீணாக்காமல் சமையல் பணிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement