குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

நங்கவள்ளி:சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.காளிப்பட்டியில், புதுார், 4 ரோடு, பனங்காடுமூர்த்தி ஆகிய பகுதிகளில், 250க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர்

வசிக்கின்றனர். அப்பகுதியில் ஓராண்டுக்கு முன் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்-பட்ட மக்கள், நேற்று காலை, 10:45 மணிக்கு, காலி குடங்க-ளுடன், மேச்சேரி - நங்கவள்ளி நெடுஞ்சாலையில், குட்டப்பட்டி ரயில்வே கேட் மேம்பால முகப்பில், சாலை மறியலில் ஈடுபட்-டனர்.

இதை அறிந்து வந்த, மேட்டூர் தாசில்தார் செந்தில்குமார், மேச்-சேரி பி.டி.ஓ., வாசுதேவபிரபு, நங்கவள்ளி போலீசார், பேச்சு நடத்தினர். தொடர்ந்து, பா.ம.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., சதா-சிவம் வந்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்ப-வத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குழாய் பதிக்கும் பணியை, அதிகாரிகள் உடனே தொடங்கினர்.

Advertisement