நாய் வளர்த்தவரை தாக்கிய ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர்
சேலம்:சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார், கான்வென்ட் சாலையை சேர்ந்தவர்
தேவபிரசாத்,
30. வீட்டில் நாய் வளர்க்கிறார். நேற்று முன்தினம், அருகே வசிக்கும்
லட்சுமி, 50, நடந்து வர, நாய் குரைத்ததோடு கடித்துள்ளது. லட்சுமி
அழுதுள்ளார்.
இதை அறிந்த லட்சுமியின் மகன்கள் மணிகண்டன், சிவா,
அவ-ரது நண்பர்கள் நவீன், முத்துராமன் ஆகியோர், தேவபிரசாத்
வீட்-டுக்கு சென்று, 'நாயை விட்டு கடிக்க வைத்தாய்' எனக்கூறி தக-ராறில்
ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லால் தேவபிரசாத்தை தாக்-கினர். படுகாயம்
அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அவர்
புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்து, மிட்டாபுதுாரை சேர்ந்த
ரவுடி சிவா, 24, முத்துராமன், 23, நவீன்குமார், 23, ஆகியோரை நேற்று
கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்
Advertisement
Advertisement