தி.மு.க., அலுவலகமாக செயல்படும் அயோத்தியாப்பட்டணம் 'யூனியன் ஆபீஸ்'
அயோத்தியாப்பட்டணம்:சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் யூனியன் ஆபீஸ், தி.மு.க., அலுவலகம் போல் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்-ளது.
சில
மாதங்களுக்கு முன், தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலரும்,
ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவலிங்கம், ஏற்காடு சட்-டசபை தொகுதி தேர்தல்
ஒருங்கிணைப்பாளர்களுடன், உறுப்-பினர் சேர்க்கை குறித்து,
அயோத்தியாப்பட்டணம் யூனியன் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்
நடத்தியதால், சர்ச்சை ஏற்பட்-டது. இந்நிலையில், ஏற்காடு சட்டசபை
தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இளையகண்ணு, சேலம் தி.மு.க.,
சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், சுற்றுலாத்துறை அமைச்சர்
ராஜேந்திரன் முன்னிலையில்
தி.மு.க.,வில் இணைந்தார்.
இதை
தொடர்ந்து, விடுமுறை தினமான நேற்று முன்தினம், அயோத்தியாப்பட்டணம்
யூனியன் அலுவலகத்தில், தி.மு.க.,வில் இணைந்த இளையகண்ணுவுக்கு,
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அறையில் தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்கும்
நிகழ்ச்சி நடந்தது.
அயோத்தியாப்பட்டணம் தி.மு.க., ஒன்றிய
செயலர்கள் விஜய-குமார், ரத்தின வேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அரசு அலுவலகத்தை விடுமுறை தினத்தில், தி.மு.க.,வினர் கட்சி
நிகழ்ச்சிக்கு பயன்படுத்தி வருவதாக, சமூக வலைதளங்களில் வைரலாகி,
சர்ச்சையை
ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து,
அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் விஜயகுமார்
கூறுகையில், ''சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் இல்லத்தில்,
இளையகண்ணு இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. அயோத்தியாப்பட்டணம் யூனியன்
அலுவல-கத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை,'' என்றார்.
அயோத்தியாப்பட்டணம்
வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரத்-தினவேல் கூறுகையில்,
''அயோத்தியாப்பட்டணம் யூனியன் அலுவலகத்தில், எந்த நிகழ்ச்சியும்
நடைபெறவில்லை. இது
தவறான தகவல்,'' என்றார்.
மேலும்
-
மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 அதிகரிப்பு
-
சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
போருக்கு மத்தியில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் 1,000 பேர்; மத்திய அரசு
-
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
-
சோளம் சாகுபடிக்காக உரமிடும் பணிகளில் தொழிலாளர்கள்
-
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்