என்னை கட்சியை விட்டு நீக்க பார்க்கிறீர்களா சீனிவாசன் பேட்டி * சீனிவாசன் கலகல பேச்சு

திண்டுக்கல்: தே.ஜ.,கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திருச்சி சென்றார்.

அப்போது பிரதமர் மோடி வருகை குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்சம் தள்ளுறீங்களா தம்பி, நான் இப்பத்தான் வர்றேன் என சீனிவாசன் கூறினார்.

அடுத்ததாக விஜய் உங்கள் கூட்டணிக்கு வருகிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீனிவாசன், யப்பா சும்மா இருங்கப்பா. என்னை மாட்டி விட்டு கட்சியை வீட்டு நீக்க பார்க்கிறீர்களா. கொஞ்சம் தள்ளுங்கப்பா. விஜய் வர்றாருன்னா நமக்கு என்ன தெரியும் என கலகலப்பாக கூறிசென்றார்.

Advertisement