வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலுக்கு ஐநா கண்டனம்; தீர்மானம் நிறைவேற்றம்
நியூயார்க்: வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரிய சிறப்பு தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக, துபாயில் உள்ள வங்கிகள், பொருளாதார மண்டலங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி வங்கியின் கிளைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2.45 மணியளவில் துபாயில் கிரீக் ஹார்பர் பகுதியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டடத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், கட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மக்கள் உடனடியாக அந்தக் கட்டடத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, ஐநா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, இந்தியா உள்பட 135 நாடுகள் வழிமொழிந்த இந்தத் தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன.
இது குறித்து பஹ்ரைனின் ஐநா தூதர் ஜமால் அல்ரோவாய் கூறியதாவது; இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும் இந்தத் தாக்குதலை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து எதிர்க்கிறது. குறிப்பாக, உலகப் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வளைகுடா பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது, எனக் கூறியுள்ளார்.
இரான் தாக்கப்பட்டு அதன் தலைவர்கள் கொல்லப்பட்ட போது எங்கே போனீங்க?
விரலை சூப்பி கொண்டு இருந்தார்களாம்.
இந்த போரை யார் ஆரம்பிதார்களோ அவைகள் மீது கொண்டு வாருங்கள் கண்டன தீர்மானத்தை.
யார் இந்த போருக்கு மூல காரணமோ அவர்கள் மீது கொண்டு வாருங்கள் கண்டன தீர்மானத்தை.
ஒருவன் அடிக்கும் பொது அதை தடுத்து அடித்தால், அவர்கள் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவீர்களா வெட்கம் கெட்ட , முதுகெழும்பு அற்ற, கேட்க திராணி அற்ற மடையர்களே..
வந்துட்டான்யா வந்துட்டான்யா .. இஸ்ரேல் அப்பாவி குழந்தைகளை கொன்னான் ....பள்ளிக்கூடம் மீது குண்டை போட்டான் அப்ப ..மப்புல தூக்கிகிட்டு இருந்திங்களா
வந்துட்டாரு. இத்தனை நாளா என்ன என்ன செய்தீர்கள். தூங்கினீர்களா? .
Is there any institutions called UN.It was sleeping all these days afraid of criticizing it.
இதுக்கு மேலே இந்த அமைப்பு எல்லாம் இருக்கப்புடாது என்பதுதான் வாசகர்களின் ஏகோபித்த கருத்தாக வெளிப்படுகிறது.
அப்படித்தான் தாக்குவான் ஈரான்.... உங்கள் வான்வெளி வழியாக வரும் அச்சுறுத்தல்களுக்கு இப்படி தான் செய்ய வேண்டும்....
ஈரான் மீது முதலில் படை எடுத்தர்களுக்கு விருது கொடுப்பீங்களா ? பொதுவான சபை பொது சபை ? அப்படியா இருக்கு ?
இதுஒரு வீணாப்போன சபை....அடப்போங்கப்பா...நீங்களும் உங்க மனிதநேயங்களும்
ஆமாம்... உங்க கண்டனத்தை பார்த்து ஈரான் ரொம்ப பயந்துரும், சும்மா தமாஷ் பண்ணாதீங்க.மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி