தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? கேட்கிறார் விஜய்
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என தவெக தலைவரும், நடிகருமான விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் முதல்வர் ஸ்டாலின் செலுத்துகிறார். தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீள முடியாத துயரம்
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை. மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
பாலியல் வன்கொடுமை
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை. மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம். சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை. சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை. கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன.
பாதுகாப்பில்லை
ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்? பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு, இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை.
இப்படி பாதுகாப்பு என்பதே தமிழகத்தில் எங்கும் இல்லை என்ற நிலை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதல்வரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
ஆமா யாரு கேட்கின்றது???? ஒரு நடிகன்???
நாளைக்கு வேறு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி தருவாங்க..
அதையும் அப்படியே பேசிட்டு போவார்..
இவர் சொல்வதை எல்லாம் எடுத்துக் கொள்ள தேவையில்லை..
இவர் பேச்சு அவ்வளவு ஒர்த் இல்லை.. இதை அப்படியே ஒதுக்கி வையுங்கள்.
ஆமாம்.. மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அதற்காக மக்கள்,
விஜயை தேர்வு செய்ய மாட்டார்கள்..
கேள்வியை அரசியல் கட்சி தலைவர் கேட்பது போல அல்லாமல், பொது மக்கள், செய்தி ஆசிரியர் கேட்பது போல பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தும் அரசியல் முதிர்ச்சி இல்லாத இவரை நம்பியா தமிழகம் என மக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள்.
ஐந்து ஆண்டுகளில் எண்ணிப்பார்த்தால் எவ்வளவு இருக்கும் என கேட்கும் இந்த அரசியல் தலைவருக்கு எவ்வளவு என்று எண்ணிச் சொல்ல யாருமே இல்லையா.. அல்லது இவர் செய்திகளையே படிப்பதில்லையா?
இவர் ஒரு brand ambassadaor அவ்வளவு தான் எழுதி கொடுத்த வசனத்தை படித்து விட்டு ஓய்வு எடுக்க சென்று விடுவார்..
தமிழகம் உழைக்காமல் வெற்றி பெற நினைக்கும் போலி தலைவர்களை நம்பி இல்லை.. என்பதை அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமுதாயம் பணம் பணம் என்று அலைவதில் பண்பாட்டை இழந்து நிற்கிறது..ஊடகம் வலைத்தளம் இவற்றில் செல் போன் மூலம் எதுவும் யாரும் பார்க்க அனுமதிக்கும் சமூகம் எப்படி பண்பட்ட இளைஞர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறது ? நாம் மக்கள் நம் பிள்ளைகளுக்கு அறம் கற்றுக் கொடுக்காமல் கட்சிகள் ,அரசுகள் மீது பழி போட்டு தப்பிக்க முடியாது.. பெண் பிள்ளைகளுக்கு சமயோதிட புத்தி மற்றும் தற்காப்பு கலை கள் கற்றுக் கொடுத்து துணிச்சலாக வளர்க்க வேண்டும் …
அதானே.. கண்ணாடியை பார்த்து கேட்க வேண்டியதை பொது வெளியில் கேட்டால் எப்படி..
இவர் எல்லாம் அரசியலுக்கு ஒர்த் இல்லை..
ஒதுக்கி தள்ளுங்கள். ரசிகர்களின் ரசனை மாறிக்கிட்டே தான் இருக்கும்
தண்ணி தொட்டி தேடி வந்த… கண்ணுகுட்டி நான்… என சிந்து பைரவி படத்தில் ஒரு பாட்டு வரும்..
நினைவில் வந்தது அதான் பகிர்ந்து கொண்டேன். வாய்ப்பு கிடைத்தால் youtube ல் கேளுங்க
கட்டிய மனைவியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் இவர் தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என கேட்பது வெட்கக் கேடு. அதற்காக இந்த திருட்டு திராவிடமாடல் திமுக அரசு ஒன்றும் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இந்த திமுக அரசு வந்தாலே திருடன்களுக்கும் குளிர்விட்டுப் போய் விடுகிறது. அதாவது நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்ற துணிச்சல் வந்து விடுகிறது. மேலும் திமுக கரை போட்ட வேஷ்டி கட்டி குற்றம் செய்தால் கூடுதல் பாதுகாப்பு...
கடவுளே தமிழகம் எவனையெல்லாம் மீடியாக்கள் படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கின்றன இதில் இவனுக்கு நிறைய தங்கைகள் இவனுக்கு குடும்பத்தைப் பற்றிய ஒன்றும் தெரியவில்லை தற்குறிக்கு தன்னுடைய மனைவியும் பிள்ளைகளையும் நடுத்தெருவில் விட்டு விட்டவன் நாளை மகளிர் மாநாட்டு இவர் நடத்துகிறார் தமிழகம் இன்னும் என்னென்ன இவன் நடத்தும் கண்றாவிகளை பார்க்க வேண்டும் என்று
பெண்கள் பாதுகாப்பு பற்றி நீங்கள், பேச தகுதி இல்லை. உங்கள் மனைவி, மகள், பிரச்சினைகளை சரி செய்யுங்கள். நல்ல செயல்களை வளர்த்து கொள்ளுங்கள்
வேலை பார்க்கும் இடத்துல அனைவருக்கும் சம ஊதியம் கொடுக்க என்ன திட்டம்??? பதில் சொல்ல முடியுமா???)
aramental tharkuriமேலும்
-
ஒடிசாவில் சோகம்; மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் பலி
-
துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்
-
இன்று இனிதாக... (16.03.2026) சிவகங்கை
-
சென்னையில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக் கொலை
-
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவையில் போலீஸ் அதிகாரி கைது
-
ரூ.2 கோடி முறைகேடு; திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு