விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
காரைக்குடி: தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என சொன்னாலும் தனித்து விடப்பட்டார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: விஜய் தனித்து நிற்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என எல்லாரையும் அழைத்துப் பார்த்தார். யாரும் கூட்டணிக்கு வராததால் தனித்து விடப்பட்டார். அதனால் தனித்து நிற்கிறார். நான் 2010ல் கட்சி தொடங்கும் போது, இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை. தேர்தல் உடன்பாடு இல்லை என அறிவித்தேன். இன்று வரை தனித்து நிற்கிறேன். நான் யாரிடமாவது பேசினேனா? என்னை அழைத்தார்கள்.
யாருடையாவது போனேனா? எனக்கு பேசாத பேரம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு கோடிகள், பதவிகள் தரப்படும் என பேசப்பட்டு இருக்கும் நான் போனேனா என்று பாருங்கள், விஜய் வரும் போதே கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என்று சொல்லிவிட்டார். ரொம்ப நாள் காத்து இருந்தீர்கள். காங்கிரஸ் உட்பட பல கட்சிகளை எதிர்பார்த்து இருந்தீர்கள். யாரும் வரவில்லை. கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ, தேவையில்லை. நாங்கள் வீரர்கள் தனித்து நிற்கிறோம். நாங்கள் மக்களை முழுமையாக நம்புகிறோம் .அவர்கள் கட்சியையும் ,தலைவர்களையும் நம்புகிறார்கள்.
எங்களுடைய கட்சி தனித்துவமானது. அதனால் தனித்து நிற்கிறோம். எங்களோடு ஒருபோதும் தவெகவை ஒப்பிட்டுப் பேச கூடாது.
காளியம்மாள் நம்முடைய தங்கை, நாங்கள் வளர்த்த பிள்ளை, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். நன்றாக இருக்க வேண்டும். என்னுடைய தங்கைக்கு வாழ்த்துக்கள். 2010ல் அதிமுகவில் மகளிர் பொறுப்பிலிருந்தேன் என்கிறார். அங்கு இருந்து தான் நாம் தமிழர் கட்சிக்கு வந்துள்ளார். திடீரென அதிமுகவில் இணைந்ததுக்கு வந்த மனமாற்றம் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
சைமன் அண்ணே. என்ன இப்புடி சொல்லிப்புட்டீக. ஆக்டர் விஜயோட கம்பேர் பண்ணினாதானே நீங்க உயர்ந்தவுங்கன்னும் அவன் சீக்கிரம் உயர்ந்தவன் ஆகிடுவான்னும் தெரியும்.நீங்கதான் இலவசம் இல்லை ன்னு சொல்லி கிட்டே இருக்கீங்க. நீங்க சொல்றதை கேக்குறதுக்கு ன்னு ஒரு இலவசம் கொடுக்கணும். இதுதான் கள நிலவரம்.
ஆமாம், திமுக விடம் பெட்டி வாங்கிய சீமெண்ணையை ஸாரி சீமானை விஜய் கட்சியுடன் ஒப்பிடக்கூடாதுதான்.
சீமான் தி மு க எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்கு பணம் பெறுபவர்.
சீமான் கேட்ட கேள்விகளுக்கு எந்த கட்சிகளும் பதில் சொல்லமுடியவில்லை. இப்போதுக்கு கொள்கை யில் உறுதியாக இருக்கும் கட்சி சீமான் கட்சி. சீமானுக்கு வாய்ப்பு கொடுத்து 5 வருடங்கள் பார்க்கலாம்.
A great joker and a lunatic in Tamil politics. Not a clean man
திருட்டு திமுகவின் டாஸ்மாக் மாடல் ஆட்சிக்கு முடிவு கட்டி இந்த கையால் ஆகாத சுடலையின் சைமன் போன் திமுக ற பி டீம் அல்லக்கைகளுக்கு பாடம் புகட்டு தமிழகமே... மடைமாற்றி கொள்ளை அடிக்கும் திமுக கூட்டம் செய்யும் வேலையை தோல் உரிபோம்
சார் மாட்டு வண்டில போகணும்னு சொல்றீங்களா ? நடைமுறைக்கு உகந்த மாதிரி சிந்தியுங்கள், நன்றி
சீமான் அவர்களே, நீங்கள் இவ்வளவு நாட்கள் தனித்து தேர்தலில் போட்டியிட்டதால் யாருக்கு என்ன பயன்.வெறுமனே, மேடையில் ஆவேசமாக பேசியதுதான் மிச்சம். இன்னும் அதேதான் தொடரும். விழலுக்கு இறைத்த நீர்.
உண்டியல் வருமானம் வருகிறது இல்லையா? அது போதும் இவருக்கு
செம்புழலார் சீமான், அவருடைய சகோதரர் விஜய் இருவருமே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர்கள், அப்படி இருக்கும்போது எப்படி ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியும்?
இவர் கட்சியுடன் எந்தக் கட்சியை ஒப்பிட்டாலும் கேவலம் தான் இவருக்குமேலும்
-
ஒடிசாவில் சோகம்; மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் பலி
-
துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்
-
இன்று இனிதாக... (16.03.2026) சிவகங்கை
-
சென்னையில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக் கொலை
-
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவையில் போலீஸ் அதிகாரி கைது
-
ரூ.2 கோடி முறைகேடு; திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு