பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவையில் போலீஸ் அதிகாரி கைது
போத்தனுார்: பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில், கோவை, தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக பணிபுரிந்த எஸ்.பி., செந்தில்குமார், சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை, கோவைபுதுார் பகுதியில், தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. இதில், கமாண்டன்ட் ஆக எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார், 2023 முதல் குடும்பத்துடன் தங்கி பணிபுரிகிறார்.
இவர், இங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்ட நிலையில், கடந்த மாதம் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். நிபந்தனையில், அரசின் அனுமதியின்றி தலைமையிடம் கடந்து செல்லக்கூடாது என, எச்சரிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள், கோவை தெற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் அடிப்படையில், செந்தில் குமார் நேற்று கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் கமாண்டன்ட் கைது செய்யப்பட்ட சம்பவம், பட்டாலியன் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@quote@
'வெல்லும் தமிழ் பெண்கள்' என, போலியாக முழங்கும், தி.மு.க., ஆட்சியின் நிர்வாக திறன் இன்மையால், தெருதோறும் காமுகர்கள் பெருகி வருகின்றனர். மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது, பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக வரலாற்றில், இப்படி ஒரு கொடூரத்தை, இதுவரை யாரும் பார்த்தது இல்லை; இனி இந்த அறிவாலய ஆட்சி தொடர போவதும் இல்லை.
- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்quote
@quote@
போலீஸ் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பையும், கண்ணியத்துடன் பணியாற்றக்கூடிய பணி சூழலையும் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். இதற்கு முன், போலீஸ்துறை உயரதிகாரி ஒருவர், இன்னொரு போலீஸ் உயரதிகாரியால் எவ்வளவும் துாரம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதையும் அறிவோம். போலீஸ் துறையின் அனைத்து மட்டங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
- ஜோதிமணி, கரூர் காங்., - எம்.பி.,quote
விடியல் அரசு ஆட்சியில் இப்புடி பொய்ட்டு அப்புடி வந்திருவார். இவருக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் ஒரு பகல் கனவு.
after investigation, come to a conclusion.விசாரணைக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வாருங்கள். DONT URGENT.அவசரம் வேண்டாம்.TRY TO FIND OUT THE WRONG PERSON.தவறான நபரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்
பொம்பள போலீஸ் மீது கைவைத்திருக்கிறான் இவனை என்கவுண்டர் செய்ய மாட்டார்களா ?
மற்றகுற்றவாளிகளை போலீஸ் எப்படி நடத்துமோ, அப்படி இந்த போலீஸ் அதிகாரியும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அரசியல்வாதிகள் ஆதரவில் தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது.
தூத்துக்குடி எம் பி கனிமொழியின் கருத்தென்ன? மெழுகுவர்த்தி ஊர்வலம் உண்டுங்களா??
இதற்கும் காரணம் திராவிட மாடல் அரசு என்று கூவும் கூட்டம் இருக்கிறது
முட்டு குடுக்கும் கூட்டம் இருக்கிறது
இரும்புக்கரம் என்னிடம் இருக்கிறதுன்னு கூவுறவங்களும் இருக்காங்களே பாசு ......
வேலியே பயிரை மேய்கிறது. பாலியல் குற்றங்களில் 100 குற்றங்கள் நடந்தால் 20 க்கும் கீழே தான் பதிவு செய்யப்படுகிறது. ஏன் என்றால் ஏழை பெண்கள், சமுதாயத்தில் மிக கீழ் நிலையில் உள்ளோர், சமூகம் தன்னை தவறாக நினைக்கும் என்று எண்ணும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பம் காவல் துறை பக்கமே போவதில்லை.
அங்கு போனால் என்ன நடக்குமோ என்ற பயம் வேறு. இப்படி இருக்க 40000 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது 20% என்றால் உண்மையான எண்ணிக்கை என்பதை நாம் மனக்கணக்கு போட்டு தெரிந்து கொள்ளலாம்.
இரும்புக்கர பெரிய சார் பெண்களுக்கு அரணாக இருந்து காப்பாற்றுவார்... குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு .....
கடந்தவாரம் என நினைவு, உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர் அவர்கள் கூடிய பிரஸ் மீட்டில் 39000 பாலியல் வழக்குகள் கடந்த 5 ஆண்டுகளில் பதியப்பட்டதாக கூறினார்கள், இவை அனைத்துக்கும் மணிமகுடமாய் அமைந்தது இது. காரணம் இதையெல்லாம் தடுத்து தண்டிக்கவேண்டுய நபர் நோ 1 குற்றவாளி. என்கோவுண்ட்டர் செய்யவேண்டும். தீர விசாரிக்கப்படவேண்டும் இது பழிவாங்கும் செயலாக கூட இருக்க வாய்ப்புண்டு. இது போல பல வழக்குகள் நடந்துவிட்டது
பாலியல் வன்கொடுமைக்கு, அதுவும் மாணவியருக்கு நடக்கும் கொடுமைக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு.மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை