அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான்
மூன்று நிபந்தனைகளை முன் வைத்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர், இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் 3 நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தல், இழப்பீடுகளை செலுத்துதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள். போரை முடிவுக்கு கொண்டு வர இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்காசியாவில் நிலவி வரும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இதுவே ஒரே வழி. ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களுடன் பேசியபோது, பிராந்தியத்தில் அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளைத் தாக்கக்கூடாது என்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறி, ஈரான் குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புதிய தாக்குதல்களுடன் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. ஈரான் அதிபர் நிபந்தனைகளை விதித்த பிறகும், ஈரான் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கியது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தன. போர் இரண்டு வாரங்களை தொடவிருக்கும் நிலையில் கூட, பதற்றம் தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 80 சதவீத மக்கள் வறுமை யில் வாடும் போது எங்கோ இருந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை தூண்டிவிட்ட ஈரான்தான் இந்த சண்டைக்குக் காரணம். இப்போ சும்மா விட்டால் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை நடத்துவர். இனிமேலும் இவர்கள் மீது மனிதாபிமானம் பார்க்ககூடாது. அடியோடு தடை செய்ய வேண்டும்.
ஷரீஅத் சட்டத்தை தூக்கி கடாசாமல், கடும்போக்கு இஸ்லாமிய வாதத்தை தினசரி அனுஷ்டானம் விலிருந்து பிரித்து மனிதத்தன்மையோடு வாழாத வரையில் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் உருப்படும் என்று சொல்லவோ, நம்பவோ, நம்ப வைக்கவோ இயலாது....
அதை விட நல்ல சோறு சாப்பிட வேண்டும் அது தான் உலகில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும்
Loosers cant be choosers.
அதுதான் ஏற்கனவே தலைவன் டிரம்ப் சொல்லிட்டாரே... பேச்சுவார்த்தை காலாவதியாகிவிட்டது என்று. அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்றால்தான் போர் முடிவுக்கு வரும். .மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி