முன்னணி நாளிதழாக செயல்படும் 'தினமலர்'
முன்னணி நாளிதழாக செயல்படும் 'தினமலர்'
மதிப்புமிக்க டி.வி. ராமசுப்பையர் அவர்களால், 1951ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் முதல் பதிப்பினைத் துவங்கி, 75 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் 'தினமலர்' நாளிதழ், ஊடக உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த நாளிதழ், தற்போது பவள விழா கொண்டாடுவது பெரு மகிழ்வை அளிக்கும் நல்லதொரு நிகழ்வாகும்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, 'நாஞ்சில் நாடு' என்று அழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் சில பகுதிகள், கேரள மாநிலத்துடன் சேர்க்கப்படாமல், தமிழ்நாட்டுடனேயே இணைக்கப்பட வேண்டும் என்று போராடியவர்களில் ஒருவர் ராமசுப்பையர். அவர், அப்பகுதி மக்களின் கல்விக்காகவும் விவசாயிகளின் நலனுக்காகவும் போராடிய சமூக செயற்பாட்டாளர்.
மிக கடுமையான பல்வேறு வகையான ஊடகப் போட்டிகளுக்கு இடையேயும் நாளிதழ் ஒன்றினை 75 ஆண்டுகளாக நடத்தி வருவது எளிதான பணி அல்ல. அது, நாள்தோறும் தன்னை வளர்த்து, புதுப்பித்து அன்றைய சமூகத்துடனும் மக்களுடனும் தன்னை இணைத்து, பிணைந்து வாழ்வதாகும். அவ்வகையில் தினமலர் இன்றைக்கும் வாசகர்களிடையே குறிப்பிடத்தக்க ஒரு முன்னணி நாளிதழாக தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
எழுத்துச் சீர்திருத்தங்களை ஏற்று நடைமுறைப்படுத்திய தினமலர் நாளிதழ், மாணவர்களுக்கும் போட்டித் தேர்வர்களுக்கும் வழிகாட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து வயதினரும் அனைத்துத் தரப்பு மக்களும் வாசிக்கும் நாளிதழாகவும் தினமலர் விளங்குகிறது.
'சொன்னதைச் செய்வோம்; செய்வதைத் தான் சொல்லுவோம். தேவை எனில், சொல்லாததையும் செய்வோம் என்பதன் நீட்சியாக, நல்லனவற்றை யார் சுட்டிக் காட்டினாலும் ஏற்று செயல்படுத்துவோம் என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சியில், அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூக நீதியின் அடிப்படையாக, ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று அழைக்கப்படும் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை குறிப்பிடலாம்.
பவள விழா காணும் தினமலர், இன்னும் பல்லாண்டுகள் சிறப்பாக மக்கள் பணியில் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துவதுடன், அந்நாளிதழின் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.ரகுபதி
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
மேலும்
-
ஒடிசாவில் சோகம்; மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் பலி
-
துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்
-
இன்று இனிதாக... (16.03.2026) சிவகங்கை
-
சென்னையில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக் கொலை
-
பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவையில் போலீஸ் அதிகாரி கைது
-
ரூ.2 கோடி முறைகேடு; திமுக பெண் சேர்மன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு