மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு
மறைமலை நகர்: நடந்து சென்ற மூதாட்டியிடம் ௩ சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியை சேர்ந்தவர் தேவகி, 76. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டின் அருகில் பேரமனுார் - சட்ட மங்கலம் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தேவகி கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்து தேவகி மகன் இளங்கோவன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி
Advertisement
Advertisement