தபால் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
வேங்கடமங்கலம்: வேங்கடமங்கலம் ஊராட்சியில், தபால் அலுவலகம் அமைக்க பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சியில் தபால் அலுவலகம் இல்லாததால், பகுதி மக்கள் ௨ கி.மீ., துாரம் பயணித்து, அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று வருகின்றனர்.
பொது மக்கள் கூறியதாவது:
வேங்கடமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டையூரில் தபால் அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது. இதனால், பெண்கள், முதியோர் ௨ கி.மீ., துாரம் செல்கின்றனர்.
எனவே, வேங்கடமங்கலத்தில் தபால் நிலையம் அல்லது துணை தபால் அலுவலகம் அமைக்க வேண்டும் என, கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்து, வேங்கடமங்கலம் ஊராட்சியில் தபால் அலுவலகம் அல்லது துணை தபால் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி