பள்ளி மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.சாத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் குஜன், 26; இவர், கடந்த 2021ம் ஆண்டு மே 2ம் தேதி பிளஸ்1 பயிலும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாதித்த சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், குஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் நே ற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குஜனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வினோதா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Advertisement