டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு: டிராக்டர், நடவு இயந்திரங்களுக்கு சிக்கலால் விவசாயிகள் கவலை
தஞ்சாவூர் : 'டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு விவகாரத்தால், டிராக்டர், நடவு இயந்திரங்களுக்கு சிக்கல் ஏற்படும்' என, டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில், போரின் காரணமாக, பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் பரவியது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில், பெட்ரோல்
பங்குகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பொதுமக்கள் அதிகளவில், வாகனங்களுடனும், கேன்கள், வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல்களை வாங்க குவித்தனர்.
பெரிய கேன்களில் பெட்ரோல், டீசல்களை அதிகளவில் வாங்கிச் சென்றதால், சிறிய அளவில் வாங்க வந்த பலரும் அவதிக்குள்ளாகினர். மேலும், பல்வேறு பெட்ரோல் பங்குகள் இருப்பு இல்லை என மூடப்பட்டு இருந்தன.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை சுமார் ஒரு லட்சம் ஏக்கரில், கோடை நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். ஆனால், டிராக்டர், நடவு இயந்திரங்களுக்கு தேவையான பெட்ரோல்,டீசல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நெல் விதைகளை வாங்கி, வயலை சமன் செய்துள்ள விவசாயிகள், பாய் நாற்றங்கள் விட்டவர்கள் அதனை நடவு செய்ய இயந்திரங்களுக்கு டீசல் கிடைக்காததால் நடவு செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, முன்னோடி விவசாயி மாரியப்பன் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடியை துவங்க விவசாயிகள் தயாராகி வருகிறோம். விதை நெல்களை வாங்கி வைத்து, இன்னும் ஒரு வாரத்தில் விதைப்பு செய்ய உள்ளோம். சில விவசாயிகள் பாய்நாற்றுகளை தயார் செய்து இயந்திரம் மூலம் நடவு செய்யவும் நடவு இயந்திரம் கிடைக்குமா என அச்சமாக உள்ளது. மூன்று லிட்டர் டீசல் இருந்தால் தான் ஒரு ஏக்கரை டிராக்டரால் உழவு செய்ய முடியும். ஐந்து லிட்டர் பெட்ரோல் இருந்தால் தான் மூன்று ஏக்கர் நடவு இயந்திரம் மூலம் நடவு பணிகளை செய்ய முடியும். டிராக்டர்கள், நடவு இயந்திரங்கள் வைத்துள்ள விவசாயிகளும், வாடகையை கனிசமாக உயர்த்தி வருகின்றனர்.
இத்துடன், பல்வேறு தாளடி நெல் அறுவடை பணிகளுக்காக அறுவடை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திறற்கு 2,700 வாடகை வசூல் செய்யப்பட்டு வந்தன. தறபோது, நான்காயிரம் ரூபாய் கொடுத்து அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது. விளைநிலங்களில் நெல்லை அறுவடை செய்யாமல் விட்டாலும், நெல்மணிகள் பாதிக்கும் இப்படியாக விவசாயிகள் பல்வேறு சவாலுக்கு இடையே சிக்கிக்கொண்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி