தலை துாக்கும் மத மாற்ற கும்பல்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்யும் கும்பல் தலை துாக்கி வருவது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க., பிரமுகர். இவர் அப்பகுதியில், ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடுத்து வந்தார். மத மாற்ற கும்பல் குறித்து, 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனால், 2019ம் ஆண்டில், தடை செய்யப்பட்ட, பயங்கரவாத அமைப்பான, பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளால், கொடூரமாக கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, அப்பகுதியில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள், ஹிந்துக்களை மத மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தடுத்து, மத மாற்ற கும்பல் குறித்து, 'வீடியோ' வெளியிட்டு அம்பலப்படுத்திய, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஆதித்யன் என்பவரை, திருவிடைமருதுார் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், மத மாற்ற கும்பல் களமிறங்கி இருப்பது என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அங்கு முகாமிட்டு விசாரணையை துவக்கி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:ராமலிங்கம் கொலைக்கு காரணமாக இருந்த, மத மாற்ற கும்பலை சேர்ந்தவர்கள், மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. அவர்கள், மத மாற்றத்தில் ஈடுபட்டு வருவதற்கான, சில 'வீடியோ' ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில், மயிலாடுதுறையில் விசாரணை நடக்கிறது. திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி அல்பாசித் கூட்டாளிகளும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (7)
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
14 மார்,2026 - 14:30 Report Abuse
இந்த 21ம் நூற்றாண்டில் ஒருவரை கட்டாயமாக மதம் மற்றம் செய்ய முயற்சி என்பதே சிரிப்பை வரவழைக்கும் விடயமாக இருக்கு 0
0
Reply
சாதிக், ramnaad - ,
14 மார்,2026 - 00:29 Report Abuse
மயிலாடுதுறை. ..தற்போது இந்த பெயரை கேட்டாலே பகீர் என்கிறது. ஓட்டு கொள்ளைக்காக அமைதியாக இருந்தால் இதுவே இன்னொரு சிரியா... 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
13 மார்,2026 - 22:34 Report Abuse
மைக்கேல்பட்டி மைக்கேல்பட்டி மைக்கேல்பட்டி 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
13 மார்,2026 - 21:46 Report Abuse
கண்ட்ரோல் ரூம் அறிவாலயம், தெரிந்தும் மோடி உறக்கம் 0
0
Reply
shakti - vilupuram,இந்தியா
13 மார்,2026 - 21:26 Report Abuse
கொடுமை 0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
13 மார்,2026 - 21:21 Report Abuse
மதமாற்றம் ஒரு தேசிய அபாயம், மதமாற்றத்தை கடுமையான சட்டம் கொண்டு வந்தது தடுக்க வேண்டும், மதமாறிய நமது இந்து சொந்தங்களை தாய்மதம் திரும்ப கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒருவர் ஹிந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு மாறிய விட்டால் ஹிந்து மதத்தில் ஒரு எண்ணிக்கை குறைந்து விட்டது என்று எண்ணாதீர்கள் மாறாக உன் எதிரியின் ஒரு எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று சந்தியுங்கள். 0
0
Reply
சிவகுமார் - ,
13 மார்,2026 - 21:08 Report Abuse
இது ஊரறிந்த ரகசியம் இல்லையா? 0
0
Reply
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி
Advertisement
Advertisement