ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்

1

டெஹ்ரான்; டெஹ்ரான், ஜெருசலம் மற்றும் வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மீது ஈரான் ராணுவம் முதல் முறையாக dancing Missile என்ற செஜ்ஜில் 2 ஏவுகணையை ஈரான் ஏவி இருக்கிறது.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் ஓயவில்லை. இந்த தாக்குதல்களின் போது ஈரான் ராணுவம், புதுப்புது ஆயுதங்களை ஏவி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மட்டுமல்ல உலக நாடுகளையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில் டெஹ்ரான், ஜெருசலம் மற்றும் வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மீது முதல் முறையாக dancing Missile என அழைக்கப்படும் செஜ்ஜில் 2 ஏவுகணையை ஈரான் பயன்படுத்தி இருக்கிறது. இந்த ஏவுகணை எதிரி நாட்டின் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல், ஏமாற்றி தனது திசையை மாற்றும் திறனுடன் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை என்பதால் டான்சிங் ஏவுகணை என்று பெயர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை திரவ எரிபொருள் பயன்படுத்தப்படுவது சிறப்பம்சம். எதிரி நாட்டின் ரேடாரில் இந்த வகை ஏவுகணை பயணிக்கும் திசையை கணிக்க முடியாது என்பது கூடுதல் சிறப்பு. செஜ்ஜில் ஏவுகணைக்கு அஷோரா, அஷீரா என்ற வேறு பெயர்களும் உண்டு. 2000 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 700 கிலோ கிராம் எடை வெடிபொருட்களை சுமந்து செல்லும்.

செஜ்ஜில் ஏவுகணையின் வரலாறு 1990களில் ஆரம்பித்த ஒன்று. 2008ல் முதல் முறையாக சோதனை நடத்தப்பட்டு, 800 கிமீ வரை வெற்றிகரமாக பயணித்தது. பிறகு 2009ல் சோதனை நடத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டது. மேலும், இஸ்ரேலின் அயன்டோம் எனப்படும் வான் பாதுகாப்பு வளையங்களை ஊடுருவிச் செல்லும் ஆற்றலும் இதற்கு உண்டு.

Advertisement