டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
நியூயார்க்: 'ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும்' என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளை எந்த நாடும் ஏற்கவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக, டிரம்ப் வேண்டுகோளை புறக்கணித்து விட்டன.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் போரால், ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது தடைபட்டுள்ளது.
இது உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொண்டு செல்ல பயன்படும் இந்த வர்த்தகப் பாதை தடைபட்டதால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், 'தங்கள் நாட்டு கப்பல்கள், எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தரும்' என்று அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார்.
ஆனால், அதில் ஆபத்து நிறைய இருப்பதை உணர்ந்த அவர், அந்த முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டார். இதன்பிறகு, உலக நாடுகளுக்கு, குறிப்பாக நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் வாங்கும் நாடுகள், தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள் என்று டிரம்ப் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க நேட்டோ நாடுகள் முன்வராவிட்டால், அவற்றுக்கு எதிர்காலம் மிக மோசமாக இருக்கும் என்றும் மிரட்டல் தொனியில் பேசினார்.
எனினும், எந்த நாடும் அவரது வேண்டுகோளை ஏற்கவில்லை. மிரட்டலுக்கும் பணியவில்லை.
நேட்டோ அமைப்பில் இருக்கும் ஸ்பெயின் ராணுவ அமைச்சர் ரூபிள்ஸ், 'நாங்கள் இதுபோன்ற கோரிக்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்' என்று வெளிப்படையாக கூறி விட்டார்.
டிரம்புடன் நல்ல தொடர்பில் இருக்கும் இத்தாலி பிரதமர் மெலோனி அரசு கூட, இத்தகைய விஷப்பரீட்சைக்கு முன் வர மறுத்து விட்டது.
எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர், 'டிரம்ப் நோக்கம் தெரிய வேண்டும். என்ன திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். படை அனுப்புவது பற்றி எதுவும் கூறவில்லை.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், 'இது மிகவும் எளிய வேலை கிடையாது' என்று கூறினார். 'விரிவான போரில் நாங்கள் ஈடுபடுவதில் விருப்பமும் இல்லை' என்று அவரும் கூறிவிட்டார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளும், தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டன.
அதிகப்படியான எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவும், டிரம்ப்பின் போருக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதால், போர்க்கப்பல் அனுப்ப வாய்ப்பில்லை.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ஸ்டாமருடன் டிரம்ப் போனில் பேசி தன் கோரிக்கையை வலியுறுத்தினார். அப்போது அவரிடம், போர்க்கப்பல்களை அனுப்ப வாய்ப்பில்லை என்று ஸ்டாமர் கூறி விட்டார்.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, “ஈரானின் அணு ஆயுத திட்டம் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுப்பது அவசியம் என்பதை கனடா ஆதரிக்கிறது. ஆனால், ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் ராணுவ நடவடிக்கைகளில் நாங்கள் இணைய மாட்டோம்,” என கூறி விட்டார்.
இப்படி, யாருமே முன்வராத நிலையில், அடுத்த கட்டமாக டிரம்ப் என்ன முடிவு எடுப்பார், தங்கள் நாட்டு போர்க்கப்பல்களை அனுப்புவாரா, முன்வராத நாடுகளை தண்டிக்கும் வகையில் வரி விதிப்பு போன்றவற்றில் இறங்குவாரா என்பது புதிராக உள்ளது.
டிரம்ப்பின் கோபத்தை எதிர்கொள்வதை எண்ணி நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பதைபதைப்புடன் இருப்பதாக, விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
எந்த நாடும் டிரம்பின் சொல்லை மதித்து முன் வராததால் டிராம்பே தானாகவே முன்வந்து ராணுவத்தை கையிலேந்தி கார்மூஸ் ஜலசந்தி செல்வாராம் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பாராம் பிறகு அங்கே சென்ற காப்பாலும் காணாமல் போகுமாம் இதை அவர் செய்வாரா
60 கும் மேற்பட்ட விருதுகள் வாங்கிய எங்கள் ஜி கேக்கிறார் போதாதா ?
டிரம்ப் ஒரு மனநலம் பாதித்தவர் என்று எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சு.
சனியன் சகடை ஒழியட்டும்
what about the great India's stand