சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்
பீஜிங் : சீனாவுடன் வர்த்தகப் பேச்சு துவங்கியுள்ள நிலையில், ஈரான் போர் விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கும் வகையில், சீனாவுக்கான பயணத்தை ஒத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சு நேற்று , ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. இதில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், சீன துணை பிரதமரான ஹெ லிபெங் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.
இந்த வர்த்தக பேச்சில் எட்டப்படும் முடிவுகள், வரும் 31 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீஜிங்கில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையேயான சந்திப்பில் முக்கிய இடம் வகிக்கும் என, எதிராப்ர்க்கப்பட்டது.
இந்நிலையில், ஈரான் போரினால் தற்போது அதிகரித்துள்ள எண்ணெய் விலையை குறைக்கவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் எண்ணெய் போக்குவரத்துக்காக திறக்க உதவவும் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தன சீன பயணத்தை ஒத்தி வைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து, டிரம்ப் கூறியுள்ளதாவது:மேற்காசிய நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெயை சீனா சார்ந்திருப்பதால், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடையை நீக்க சீனா உதவ வேண்டும்.ஈரானின் அச்சுறுத்தல்களால் உலகளாவிய எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ள நிலையில், இதற்கு சீனா உதவுமா என்பதை அந்நாட்டுக்கான என் பயணத்துக்கு முன்பாக நாங்கள் அறிய விரும்புகிறோம். சீனா தன் முடிவை அறிவிக்கும் வரை என் பயணத்தை தள்ளிப் போட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன இந்த உலகத்தில் உள்ள அணைத்து நாடுகளும் எல்லா தலைவர்களும் ஏன் இந்த பைத்தியக்காரன் டிரம்ப் பேச்சை ஏன் இன்னும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் வெனிசுலா அதிபராக கைது பண்ணி வச்சிருக்கான் கன்னடா அமெரிக்காவுடன் இணைத்து 51வது ஸ்டேட்டாக வச்சுக்குவேன் என்கிறான் இப்ப என்ன என்ன சீனாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க முடியாது என்கிறான் என்ன எழவு தான் நினைச்சுட்டு இருக்கான் அந்த பைத்தியக்காரன் இவனால் உலக மக்கள் அனைவரும் படாத பாடுபடுறாங்க அமெரிக்க மக்கள் எப்படி பொறுத்துக் கொள்றாங்கன்னு தெரியல இதற்கெல்லாம் நல்ல காலம் எப்போது வரும்.. Jaihind
ஒபாமா அறிவு பூர்வமாக செயல்பட்டார் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் , இவர் எதோ வெள்ளை உயர் எண்ணம் போன்ற முட்டாள்தனமான விவாதங்கள் செய்து நாட்டை கூட்டிசெவராகியுள்ளார்
சீனா தற்போது அமெரிக்காவின் 80% பலத்தில் உள்ளது இன்னும் 5 வருடத்தில் 100 சதவிகிதம் ஆகும்
Trump claims the US gets 1% to 2% of its oil from the Strait of Hormuz. China gets 90%. This war was never about Iran. It was always about leverage over Beijing.
very true ... all is due to petro dollar.. india and China are few countries that are using non dollar based trade for oil.. so america is loosing big...
ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்கிறார், ஆனால் இவர் ஒரு மன நோயாளி என்று இவர் நாட்டிலே கூறுகிறார்கள், அதைப்போல உலக யுத்தத்தை ஆரம்பித்து வைத்து, மற்ற சில நாடுகளையும் " பெரியண்ணன் " தோரணஒயில் மிரட்டிக்கொண்டு இருக்க்கிறார், அமெரிக்கன் மக்களே இவரால் பாதிப்பு அடைந்து இவர் பதவி வியக்க கோரி போராட்டம் நடத்துகையில் இவர் உறுதிப்படுத்திவிட்டார் அல்லவா, தான் ஒரு மன நோயாளி என்று.மேலும்
-
ஆதவ் அர்ஜூனா பேச்சு உண்மைக்கு மாறானது; ரஜினி கண்டனம்
-
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
கரூர் நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜர்
-
திமுகவின் பண பலம் ஜெயிக்காது; மக்களின் மனபலம் ஜெயிக்கும்: நயினார் நாகேந்திரன்
-
எரிந்த நிலையில் 4 பேர் சடலம் காரில் இருந்து மீட்பு; நெல்லை அருகே மர்ம சம்பவம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு