விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
புதுடில்லி: விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை என குறிப்பிட்டு தனியாக கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
*விமானங்களில் 60 சதவீதம் இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
* விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது.
*ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.
*விமான பயணம் தொடர்பான விவரங்களை பயணிகளுக்கு அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மூலம் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும், வெ ளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
பல விமான நிறுவனங்கள், பயணச்சீட்டு முன்பதிவு செய்த பிறகோ அல்லது இணையவழிப் பதிவின் போதோ, தங்களுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வந்தன.
இந்தப் புதிய உத்தரவுகள் பயணிகளுக்கு நியாயமான விலையில் பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமான கம்பெனிகள் இருக்கைகளுக்கு கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்தது கான்கிராஸ் மத்திய அரசை நடத்தின காலகட்டத்தில். காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்வை.
பயணக் கட்டணம் நெறிமுறைப் படுத்தப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து கட்டணங்கள், விமான கட்டணம் அளவுக்கு பல நேரங்களில் வசூலிக்கப் படுகிறது. இதற்கு மாநில அரசு விரைந்து முடிவு காண வேண்டும்.
சர்வதேச விமானங்களில் டாய்லெட் அருகில் இருக்கும் சீட்டுகளுக்கு மட்டும் பணம் அதிகம் கேட்பதில்லை
Great relief for families travelling together. They made in such a way that if you dont travel alone you have to pay a hefty fee of consecutive seats. Day light roberry.
மத்திய அரசின் இந்த அதிரடி சலுகைகள் விமானம் பயன் படுத்துபவர்களுக்கு ஓர் நல்ல வரப்பிரசாதம் ஆகும். இதுபோல மத்திய அரசு இரயில் பயனாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமகன்களுக்கும் இதுபோன்ற சலுகைகளை அள்ளி வீசி பிஜேபி அரசு மக்கள் செல்வாக்கையும் நம்பிக்கையும் பெற வேண்டும். இந்த யுக்திதான் மத்திய அரசை நிலையாக ஆட்சி புரிய வழி காட்டும்.
அந்த இருக்கை அலாட்மென்ட் கட்டண வசூல் இருக்கே. அது பகல்நேர கொள்ளை. அதை நிறுத்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றி. இந்த அறிவிப்புக்கு பின்பும் விமான நிறுவனங்கள் அப்படி கட்டணம் வசூலித்தால், அவர்களை சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கவேண்டும்.மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்