அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
நமது டில்லி நிருபர்
ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்து, ஓய்வு பெறும் எம்பிக்களை பிரதமர் மோடி பாராட்டினார். அப்போது அவர், ''அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை'' என தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுகிறது. அவற்றில் ஒவ்வொரு எம்பிக்களும் தனித்துவமான பங்கு உண்டு. தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறும் எம்பிக்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஓய்வு பெறும் எம்பிக்களின் அனுபவம் பொது வாழ்க்கைக்கு தொடர்ந்து வழிகாட்டும்.
அரசியல் பயணம் என்பது என்றும் தொடரக்கூடியது, அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாதுதேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை பார்லிமென்ட் சேவைக்காக அர்ப்பணித்துள்ளனர். அனைத்து புதிய பார்லிமென்ட் எம்பிக்களும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டுகிறேன்
அர்ப்பணிப்புடன் அவைக்கு வந்து, சமூகத்தின் மீதான பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகியவை மூத்த எம்பிக்களின் குணங்களாகும். அவர்களின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். ராஜ்யாசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், அவை நடவடிக்கைகளை அமைதியாகவும், பாரபட்சமின்றியும் நடத்தி உள்ளார்.
கடின உழைப்பாளி
ஹரிவன்ஷ் நீண்ட காலமாக அவையில் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர் எழுதுவதில் திறமையானவர் மட்டுமல்ல, கடின உழைப்பாளியும் கூட. அவர் நாடு முழுவதும் பயணம் செய்து தனது கடமைகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றியுள்ளார். பார்லிமென்டின் கண்ணியத்தைக் காக்குமாறும், அனுபவம் வாய்ந்த எம்பிக்களிடம் உத்வேகம் பெறுமாறும் புதிய எம்பிக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நகைச்சுவை
ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துவதற்கு அவர்களின் வழிகாட்டுதல் இன்றியமையாதது. ஒரு காலத்தில் இந்த அவை அதன் கலகலப்பான நகைச்சுவை மற்றும் நையாண்டிக்குப் பெயர் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அத்தகைய தருணங்கள் குறைந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இங்கும் கடைசிவரை தீவீர அரசியலில் இருந்தால்தான் இறந்தபின் கடற்கரையில் இடம் கிடைக்கும். அது மோட்சத்தை விட உயர்வானது. மலரலங்காரம் ,தயிர் வடை, தினசரி கூட தினசரி கிடைக்கும்.
எதிரிகளையும் பாராட்டும் மோடிஜி யின் பண்பு இறைவனின் பண்பு..... இது மனிதர்களுக்கே புரியும்
கட்டுமரம் கூட உடல் தளர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த போதும் பதவியை மகனுக்கு விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை பதவி சுகம் அலாதி சுகம். புலி மேல் சவாரியில் முற்றுப் புள்ளி ஆபத்தானது.
என்னடா இது பாராளுமன்றம் பக்கமெல்லாம் வர்றீங்க? இந்த மாதம் ஈரான் அமெரிக்க கோமாளி டிரம்ப் போர் நடப்பதால் வெளிநாட்டு சுற்றுலா டூர் பேக்கேஜ் இல்லை போல அதான் இங்க ஒதுங்கி கட்டையில போகும்போதும் பதவியோடதான் போகனும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது போலி பாசமழை பொழியறாப்ல நியூசிலாந்து முன்னாள் பிரதமரிடமிருந்து மோடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் பரதமர் பதவியில் இருந்து ரிட்டையர்டு ஆன பிறகும் ஆஸ்திரேலியா நாட்டில் வேலை தேட அங்கு அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார் நம்ம ஊர்ல பல எழவெடுத்த ஈனத்தர எச்சக்கல பண்ணாடைகள் பாடையில் போகும் போதும் பதவியுடன் போக துடிக்கிறானுகள்
ஆளும் அராசுகள் எல்லாம் சரியாக இருப்பது போல ஒரு பிரம்மையை மீடியாக்கள் மூலம் பரப்பிவிட்டார்கள். உண்மை எது என்று குழம்பும் வண்ணம் சூழ்நிலை இருக்கிறது. நமது நம்பிக்கைகளை ஓரங்கட்டிவிட்டு, உண்மையை நோக்கி நாம் நகரத் தேவைப்படும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நம்பிக்கைகளை உடைத்து வெளிவரும்போதுதான் வெளிச்சத்தை நாம் உணர முடியும்.
வடகொரிய அதிபரை பாராட்டுவதுபோல தெரியவில்லையே.
உலக சுற்றுலா மாதிரி முடிவே கிடையாது
ஆம் மோடிஜி நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் பிரதமராக இருந்து அழிவு சக்திகளை போட்டு தள்ளுங்கள்
வெளிநாடுகளில் நமது இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கறுப்புப்பணத்தின் பிரம்மாண்ட அளவை குறிப்பிட ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் ரூபாய் தரும் அளவு கறுப்புப்பணம் குவிந்திருப்பதாக கூறியதை மிகவும் மோசமாக திரித்து பொய்யாக "பிரதமர்" எல்லோருக்கும் அந்த துகை தருவதாக கிரிமினல்தனமாக மாற்றிப் பேசியது எதிரிக்கட்சிகள் தான்.
விடியல் தலைமையில் தமிழ்நாட்டுக்கு ₹10.5 லட்சம் கோடிகள் கடன், அதாவது ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகன் தலையிலும் ₹1,50,000/- கடன் உள்ளது என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா? இப்படி அபத்தக் கணக்கு போடுவது தான் 200 ரூபா உபிஸ் வேலை
தேசத்தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை விமரிசிக்க சரியான முறைகளை கையாள வேண்டும். தமிழ்நாடு தனியானதல்ல. உங்களுக்கு அந்த எண்ணம் இருந்தால் தேசதுரோகம்
ஏதோ சம்பளம் வாங்காமல் மக்களுக்கு சேவை செய்த மாரி பில்ட் அப் குடுக்கிறாரு ...மேலும்
-
காஸ் சிலிண்டர்கள் கேட்டு ஏஜென்சிகளுக்கு நேரில் செல்லாதீர்கள்; நுகர்வோர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
-
இந்தியா நோக்கி யு டர்ன் அடித்த ரஷ்ய ஆயில் டேங்கர் கப்பல்
-
அரிசி வியாபாரியிடம் ரூ.80,000 பறிமுதல்
-
உணவு தேடி ஊர்ப்பகுதிக்கு வந்த காட்டெருமை பலி
-
தேர்தல் நடத்தை விதிமுறை :171 துப்பாக்கி ஒப்படைப்பு
-
மதிப்பூதியம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்