செயற்குழுக் கூட்டம்

மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதிய சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது.

செயலாளர் தமிழையா, பொருளாளர் அப்துல் ரகுமான் மாதாந்திர, நிதிநிலை அறிக்கையை வாசித்தனர். ஓய்வூதியம் பெற பிற சங்கத்துடன் இணைந்து போராடுவது, சங்கத்திற்கு கட்டடம் பெற தாசில்தாரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. செயல் தலைவர் மணி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். துணைத் தலைவர் சிதம்பரம், கவுரவ தலைவர் துரைபாண்டியன், ஆலோசகர் வீரணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் ஸ்ரீகண்டன் நன்றி கூறினார்.

Advertisement