சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவம்

சென்னை: சிறந்து எழுத்தாளர்களுக்கு, அமரர் தேவன் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கப்பட்டது.

'அமரர் தேவன்' அறக்கட்டளை சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா - 2026, மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி அரங்கில், நேற்று நடந்தது.

எழுத்தாளர்கள் நாக.சொக்கலிங்கம், ஜனனி ரமேஷ், முத்துகுமரன் ஆகியோருக்கு, இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் ராகவன் விருது வழங்கினார்.

பின், அவர் பேசியதாவது:

பத்திரிகை, ஊடகங்களில் பல மாறுதல்கள் நடக்கின்றன. வாழ்கிறதா, தாழ்கிறதா என்பது புதிர். பத்திரிகை துறையில் ஜொலிப்பது கடினம். அந்த வகையில், முன்பிருந்த பத்திரிகைகள் பல காணாமல் போயின. ஆனால், 'கலைமகள்' இதழ் இன்றளவும் சிறந்து விளங்குகிறது.

எழுத்தாளர் தேவனின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் உண்மையானவை. அவர் எழுதிய, 'துப்பறியும் சாம்பு' நுால் மிகவும் பிரசித்தி பெற்றது. இளைய தலைமுறையினர் அந்த நுாலை படிக்க வேண்டும்.

இவ்வாறு ராகவன் பேசினார்.

எழுத்தாளர் முத்து குமரன் பேசுகையில், ''தேவனின் நுால்கள் புத்தக வடிவம் பெற்றபோது, அந்த உரிமைகள் பத்திரிகைகள் வசமே இருந்தன.

பல போராட்டங்களுக்கு பின்பே, அவரது படைப்புகளுக்கு உரிமை பெற்றார்.

நகைச்சுவை கதைகள் மட்டுமின்றி, குடும்பம், சமூகம் தொடர்பான புத்தகங்களும் எழுதியுள்ளார்,'' என்றார்.

Advertisement