வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு
சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (மார்ச் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை மார்ச் 14ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் குறைந்து, 14,760 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 1,120 ரூபாய் சரிவடைந்து, 1,18,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் வார தொடக்க முதல் நாளான இன்று (மார்ச் 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் சரிவு
தங்கத்தை போல் வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 276 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து ஒரு கிலோ 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஏற்றியது எவ்வளவு குறைவு கிராம் க்கு 50 இது உங்கள் ஊரில் சரிவு
pictures niceமேலும்
-
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் ஆவணம் அவசியம்; தமிழகத்தில் இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்
-
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப்
-
கஞ்சா போதையில் தடம் புரளும் தமிழகம்; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
ஒடிசாவில் சோகம்; மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் பலி
-
துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்; விமான சேவை பாதிப்பு
-
இன்று இனிதாக... (16.03.2026) சிவகங்கை