ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் ஆவணம் அவசியம்; தமிழகத்தில் இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்
நமது நிருபர்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

1.26 கோடி ரூபாய்
உளுந்தூர் பேட்டையில் நடந்த வாகன சோதனையில் ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்பு மனுக்கள்
மார்ச் 31, ஏப்ரல் 3,4 மற்றும் 5ம் தேதிகள் விடுமுறை என்பதால் மனுதாக்கல் செய்ய முடியாது. மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பெறப்படும். தேர்தலை முன்னிட்டு 2106 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படையினரின் சோதனையில் பிடிபடும் பணம் அல்லது பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அர்சனா பட்நாயக் கூறினார்.
இவ்வளவு நாளா திராவிஷ ரவுடிகளின் கொத்தடிமையாக இருந்த தமிழக காவல்துறை இப்போது சுறுசுறுப்பாக மக்களை குறி வைத்து அவர்களின் பணம் மற்றும் உடமைகளை பிடுங்கி தங்களது கடமை உணர்வை காண்பிப்பார்கள்.
5 வருடம் முன்பு கூட இதே கண்டிஷன் ரூ 50,000 - விலைவாசி ஏற்றத்தால் இதை ரூ 1 லட்சம் செய்ய வேண்டும் - இப்படிக்கு மு...டாள் கயவர்கள் கட்சி நாளை அறிக்கை விட்டால் ஆச்சரியம் இல்லை
சென்ற தேர்தலில், வடநாட்டு சுற்றுலா பயணியிடம் இருந்த பணம் பறிக்கப்பட்டாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது
ரூபாய் 50000 என்பது ஒரு ஜுஜுபி தொகை வியாபாரிகள் நியாயமான ஒரு தொகை கொண்டுபோக அனுமதிக்க வேண்டும் இன்னும் ஹைதர் காலத்து சட்டங்கள் எதற்கு??
ஒவ்வொரு தேர்தல் செலவுக்கு தேவையான பல கோடிகள் சேர வேண்டிய இடத்துக்கு எப்போ போய் சேர்த்தாச்சு. மேற்கொண்டு தேவைப்படும் பணம் ஆம்புலன்ஸ் மற்றும் டிபார்ட்மெண்ட் வாகனங்களில் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும். இதுக்கு ஏன் இவ்வளவு அலப்பறை? பண மூட்டையை படுக்கையாக பயன்படுத்தியவர்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள்.
இதுவரை தமிழ் நாட்டில் ரூ .ஒண்ணேகால் கோடி கைப்பற்றப்பட்டது என்பது மிக மிக சிறிய தொகை . மேலும் பறக்கும் படையினர் அனை த்து வேட்பாளர்களையும் அவர்களது கைக்கூலிகளையும் பின் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தேவை . இவ்விஷயத்தில் பொது மக்கள் ஒத்துழைக்கவே மாட்டார்கள் .ஏனெனில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அவர்கள் எதிர்பார்க்கும் தொகையை தடுப்பது என்பது இயலாத காரியம் .
ஆவணங்கள் என்னென என்று தினமலரில் விளக்கமாக தெரிவித்தால் புண்ணியமாக போகும்.
ஆணவங்கள் என்றால் Source of income. ..
கூடவே அரசியல்வாதிகள் - பெண்கள், ஆண்கள் - அவர்கள் உடம்பில் எவ்வளவு பவுன் நகை போடவேண்டும் என்றும் கூறவேண்டும். அதிக பணம் எடுத்து செல்லமுடியாத பட்சத்தில், அவர்கள் நகையாக அதிகம் உடம்பில் போட்டு கொண்டு, பிறகு போய்சேரவேண்டிய இடத்தில அந்த நகைகளை விற்று தேர்தல் இலவசமாக மக்களுக்கு கொடுத்து தேர்தல் அதிகாரிகளையே ஏமாற்றுவார்கள். நம்ம அரசியல்வாதிகள் பயங்கர தில்லாலங்கடிகள்.
2016 தேர்தலில் 144 தடை உத்தரவு போட்டு, ஆம்புலன்ஸ் இல் பணம் பட்டுவாடா செய்தார் ஜெயலலிதா
நீ பார்த்தே
அப்போ மேடம் கொடுத்தாங்க .... இப்போ மக்களுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச திராவிட மாடலும் கொடுக்குது .... என்ன வித்தியாசம் கொத்தடிமைஸ் ????
பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபடுவர்மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்