கஞ்சா போதையில் தடம் புரளும் தமிழகம்; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: கஞ்சா போதையில் தமிழகம் தடம்புரண்டுள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: கஞ்சா போதையில் தமிழகம் தடம்புரண்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் டாக்டர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவம் எளிதில் கடந்து செல்ல முடியாதது.
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் ஸ்டாலினின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன.
அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். போதையின் வீரியத்தில் பார்ப்போர் மீதெல்லாம் தாக்குதல் தொடுப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது.
சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் போதையில் ரகளை செய்பவர்களைக் கண்டிப்பதற்கு கூட பொதுமக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு “தமிழகத்தில் போதை நடமாட்டமே இல்லை” என வாய்கூசாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் உடன்பிறப்புகளைக் கண்டாலே கடும் கோபம் தான் எழுகிறது.
இவர்களைப் போன்ற நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
ஒழியட்டும் திமுக வின் கஞ்சா மாடல் அரசு விடியட்டும் தமிழகம்....கஞ்சா நிதி முதல் வர் ஆவது தமிழன் தன தலையில் மண்ணை போட்டு கொள்வதுக்கு சமம்
பாலியல் வன்கொடுமையில், ஊழலில், கொலை, கொள்ளை சம்பவங்களிலும் கூட தமிழகம் தடம்புரண்டு கிடக்கிறது. ரயில் தடம்புரண்டா கூட சரிசெய்துவிடலாம் ஒரு சில மணி நேரங்களில். ஆனால் ஆட்சியே தடம்புரண்டா... சரிசெய்யலாம் ஒரே நாளில். ஆம், வரும் தேர்தலில் மக்கள் சிந்தித்து, திமுகவை புறக்கணித்து, பாஜகவை ஆதரித்தால் தமிழகம் மீண்டும் சீர்பெற்று எழும்.மேலும்
-
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
-
ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு
-
ஒடிஷா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!: காப்பாற்ற முயன்ற 11 ஊழியர்கள் காயம்
-
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெறக்கூடாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
2 இட்லி ரூ.40, அசைவ சாப்பாடு ரூ.350: கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம்
-
உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு