கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ''போர் மிக விரைவாக முடிவடைந்துவிடும்; அதன் பின் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்கள் அனுப்பாத நாடுகள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். சீனா, ஜப்பான், பிரான்ஸ், நேட்டோ நாடுகள் தற்போது உதவாவிட்டால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. மற்ற நாடுகள் எங்களுடன் பாதுகாப்பு அளிக்க உதவினால் நல்லது. நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
போர் மிக விரைவாக முடிவடைந்துவிடும்; அதன் பின் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும்; ஈரானிடம் ஏவுகணைகள் குறைந்த அளவில் தான் உள்ளது; இதனால் தான் ஈரான் தாக்குதல்களை குறைத்துள்ளது. நாங்கள் அவர்களின் விமானப்படை, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பை அகற்றியுள்ளோம். நாங்கள் கார்க் தீவைத் தாக்கினோம். நாங்கள் எப்போதும் நேட்டோவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இஸ்ரேலுடன் நாங்கள் உண்மையில் மிகவும் இணக்கமாகப் பழகுகிறோம்.
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பது குறித்து நாங்கள் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு இந்த ஜலசந்தி வழியாக எண்ணெய் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் மிகக் குறைவாகவே, அதாவது 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. உதாரணமாக, சீனா தனது மொத்தத் தேவைக்கான எண்ணெயில் 90 சதவீதத்தை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறுகிறது. எனவே, பிற நாடுகளும் எங்களுடன் இணைந்து இப்பகுதியைப் பாதுகாப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
நேட்டோ நாடுகள் மறுப்பு
எனினும் டிரம்ப் கூறியபடி, ஹார்முஸ் ஜலசந்திக்கு தங்கள் நாட்டு போர்க்கப்பலை அனுப்ப எந்த நாடும் முன்வரவில்லை. ஆஸ்திரேலியா வெளிப்படையாகவே, 'நாங்கள் அனுப்ப மாட்டோம்' என்று கூறி விட்டது. மற்ற நாடுகளும் இது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக உள்ளன. நேட்டோ நாடுகளும் தயாராக இல்லை.
அட உன்னால்தானடா காசா என்னை விலை கூடியது .மண்டையா .....?
பொருளாதாரம் பற்றி சுத்தமாக தெரியாது டிரம்ப் .
உலகிலேயே பொறுப்பற்ற ஒரு வெட்டிமுண்டம்
டிரம்பின் வெளியுறவு கொள்கை பல்லிளித்து விட்டது. எல்லா நாட்டுகளிலும் வரி விதிப்பு அதிகமாக செய்த பலன் இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்
வெட்டி வம்பு இழுத்து நீ ஆரம்பிச்ச சண்டைக்கு மத்த நாடுகள் எதுக்கு போர்க் கப்பலை அனுப்பனும்? எல்லாத்தையும் கேட்டுத்தான் நீ சண்டைக்கு போனியா?
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் அது இன்று எதிர்பார்க்கலாமா? இங்குள்ள பெட்ரோலியம் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் கப்பல் வராததை காரணம் காட்டி கொள்ளை அடிக்க தொடங்கிவிட்டார்கள்... அங்கே போர் நின்றாலும் இங்கே ஏற்றிய விலையை குறைக்க மாட்டார்கள்.... பண பேய்கள் ....
நீ அழிந்தால் மட்டுமே உலகம் உருப்படும்.
எப்போ? இவர் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை 4 வருடத்துக்கும் ஏதாவது ஒரு நாட்டுடன் சண்டை போட்டு உலக மக்களை இம்சிக்காமல் இந்த நபருக்கு தூக்கம் வராது
Petrol and gas prices in the USA increased by 26% in the last 15 days.
டிரம்ப் பின்னாடி போனால் தேரை இழுத்து தெருவில் விட்டு சென்று விடுவார் இவனை நம்பியே இஸ்ரேல் நடுத்தெருவில் நிற்கிறது ஏராளமான மக்கள் செத்து மடிகிறார்கள் இதற்கு ட்ரம்ப் என்ன பதில் சொல்லப் போகிறார்மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!