எவருக்கும் வரக்கூடாத துயரம்; தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு தேர்வெழுதிய 10ம் வகுப்பு மாணவன்
நமது நிருபர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் தந்தை உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அரசு தேர்வு எழுத சென்றது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்,45,. இவர் புரோட்டோ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார்.
இவரது மகன் இளமாறன் 15, சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் அரசு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். தந்தை இறப்பால், இளமாறன் சோகம் அடைந்தார். இந்த துயரமான சூழலில், இன்று (மார்ச் 16) காலை சிங்கம்புணரி மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தந்தை சரவணனின் உடலுக்கு இளமாறன் இறுதி சடங்குகள் செய்தார்.
பிறகு இன்று நடந்த ஆங்கில பாட தேர்வு எழுத இளமாறன் சென்றார். இந்நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் துயரமான சம்பவம் எவருக்கும் நிகழக்கூடாது. இளமாறனுக்கு நிகழ்ந்த சோதனை மிகுந்த வருத்தம் அளிக்கிறது என உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்வளவு இளம்வயதிலேயே எவ்வளவு அழுத்தம் , மற்றுமொரு விதவையை உருவாக்கிய அக்காவுக்கு எனது கண்டனம் . இன்னமும் மதுவிலக்கு பற்றி பேசக்கூட திராணி அற்ற குடும்பம் அவளது குடும்பம்
மகனாகவும் மாணவனாகம் தன் கடமையை செய்துள்ளார்
துக்கத்தில் பங்கு கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்கள். அதேசமயம், மாணவனின் அசாத்திய மனவலிமை மற்றும் முயற்சி பாராட்டுக்குரியது. இதுபோலவே, இரண்டு மாணவர்களும் உடல்நலம் சரியில்லாது, தேர்வுக்கு பங்கேற்றது பாராட்டுக்குரியது. விரைவில் உடல்நலம் தேற இறைவன் அருள் புரியட்டும்.
பாவம் அந்த பையன் தேர்வு எப்படி எழுதி இருப்பான்.
இறைவன் அவருக்கு மன தைரியத்தையும், மனவுறுதியையும் கொடுத்து சிறப்பான வாழ்க்கையை அவருக்கு ஆசிர்வதிப்பாராகமேலும்
-
'காக்க வச்சு பழிவாங்கிட்டாரோ?'
-
துபாய் விமான நிலையம் மீது தாக்குதல் பயணியர் விமான சேவை கடும் பாதிப்பு
-
'ஈரானில் சிக்கிய 550 இந்தியர் ஆர்மீனியா வழியாக மீட்பு'
-
ரசாயன நெடியை சுவாசித்த 3 வயது குழந்தை பலி மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'காங். , வெற்றியை தடுக்க தேர்தல் கமிஷன் சதி'