துபாய் விமான நிலையம் மீது தாக்குதல் பயணியர் விமான சேவை கடும் பாதிப்பு
புதுடில்லி: துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய 'ட்ரோன்' தாக்குதலால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு மையம் மீது, ஈரான் நேற்று அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும், பல விமானங்கள் அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
நீண்ட போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, 6 மணி நேரத்துக்கு பின், மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தின் சென்னையில் இருந்து துபாய்க்கு, 206 பயணியருடன் 'எமிரேட்ஸ்' விமானம் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டது.
குஜராத் கடல் எல்லை அருகே சென்றபோது, துபாய் விமான நிலையம் அருகே தாக்குதல் நடந்ததையடுத்து, துபாய் வான் வெளி தற்காலிகமாக மூடப் பட்டது தெரியவந்தது.
இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, சென்னையில் நேற்று காலை 8:20 மணிக்கு அந்த விமானம் மீண்டும் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பயணியர், ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் துபாய் செல்ல இருந்த மற்ற நிறுவன விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால், 700க்கும் மேற்பட்ட பயணி யர் தவித்து வருகின்றனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து 353 பயணியருடன் எமிரேட்ஸ் விமானம் துபாய்க்கு நேற்று அதிகாலை 4:40 மணிக்கு புறப்பட்டது.
இந்த விமானமும் பாதி வழியில் திரும்பி, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நேற்று காலை 8:40 மணிக்கு வந்து சேர்ந்தது.
கொச்சியில் இருந்து 325 பயணியருடன் துபாய்க்கு புறப்பட்ட மற்றொரு எமிரேட்ஸ் விமானமும் திருப்பி அனுப்பப்பட்டது.
@quote@ மேற்காசிய போர் பதற்றம் காரணமாக நம் நாட்டு நிறுவனங்கள் 4,335 விமானங்களையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 1,187 விமானங் களையும் ரத்து செய்துள்ளன. இந்த சூழலிலும் , விமானங்களில் 2,19,780 பயணியர் பயணித்துள்ளனர். ஒரே நேரத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப் பட்டதால், பாதிக்கப்பட்ட பயணியருக்கு 164 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. - ராம்மோகன் நாயுடு மத்திய அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சிquote
மேலும்
-
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் தண்ணீர் பந்தல் அமைக்காத கட்சிகள்
-
ஆத்துார் வாலிபர் கொலை: நண்பர் உட்பட இருவர் சரண்
-
கோவில் பட்டாவில் குளறுபடி பத்து ரூபாய் இயக்கம் மனு
-
கால்கள் செயல் இழந்த நிலையில் பயணிகளை பாதுகாத்த டிரைவர்
-
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து
-
தேர்தல் விதிமுறைகளால் ஆடு விற்பனை மந்தம்