பேச்சு, பேட்டி, அறிக்கை
இந்திய கம்யூ., தேசிய கவுன்சில் உறுப்பினர் முத்தரசன் பேச்சு: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம். நம் நாட்டு விவகாரத்தில் தலையிட, அமெரிக்க அதிபர் யார்? நம் நாட்டிற்கு தேவையான வசதிகளை செய்து தராமல், அமெரிக்காவின் கைப்பாவையாக மத்திய அரசு மாறிவிட்டது. வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாம், அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அடிமையாக மாறி விட்டோம். இதுதான் இன்றைய மத்திய அரசின் நிலை.
மேற்காசிய போரால் பல நாடுகளில் காஸ், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவுது... என்னமோ, நமக்கு மட்டும் தான் தட்டுப்பாடு என்பது போல பேசுறாரே!
விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் பேட்டி: தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு உரிமைகள் பறிபோகின்றன. மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தமிழக அரசு முறையாக கையாளவில்லை. தமிழக முதல்வர், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வரின் மவுனம், காவிரி உரிமையை மீண்டும் கர்நாடகாவிடம் பறிகொடுத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி நடந்திருந்தால், முதல்வர் முதல் ஆளாக எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்... அங்க, அவரது கூட்டணி கட்சியான காங்., ஆட்சியல்லவா நடக்குது!
த.வெ.க., பிரசார செயலர் நாஞ்சில் சம்பத் பேட்டி: தி.மு.க.,வின் சமீபகால மாநாடுகள், த.வெ.க., நிழலை போல் மாறி வருவது வேடிக்கையாக இருக்கிறது. சுயமாக சிந்திக்க தெரியாத தலைமையால், தி.மு.க., மாநாடுகள் தோல்வியை தழுவுகின்றன. இது, அந்த கட்சியின் பலவீனத்தையே பறைசாற்றுகிறது. இனிவரும் காலங்களில், தி.மு.க., மாநாடுகளில் காப்பி அடிக்கும் அவசரத்தில், த.வெ.க., கொடியை கையில் ஏந்தினாலும் ஏந்துவர்.
'இன்னோவா' காருக்காக அ.தி.மு.க.,வுக்கு தாவிய இவர், சில ஆண்டுகளாக தி.மு.க.,வுக்கு ஆதரவா முழங்கியும் அவங்க கண்டுக்காத கடுப்பில், இப்படி போட்டு தாக்குறாரோ?
சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்துள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இதுவரை நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளார். தரையில் ஊர்ந்து சென்றவர் யார் என, அனைவருக்கும் தெரியும். சசிகலா காலைத் தொட்டு, முதல்வர் பதவி பெற்றார்; நன்றி கெட்ட மனிதர். அவரை அரசியலில் இருந்து துடைத்தெறியும் காலம் வந்து விட்டது.
அரசியலில் நன்றி மறந்தவங்க தான் நிறைய இருக்காங்க... ஜெ.,விடம் ரெண்டு முறை முதல்வர் பதவியை ஒப்படைத்த இவர் கூட, அவங்க மறைந்த பிறகு, சசிகலாவிடம் முதல்வர் பதவியை தர மறுத்து, தர்ம யுத்தம் நடத்தியவர் தானே!
மேலும்
-
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் தண்ணீர் பந்தல் அமைக்காத கட்சிகள்
-
ஆத்துார் வாலிபர் கொலை: நண்பர் உட்பட இருவர் சரண்
-
கோவில் பட்டாவில் குளறுபடி பத்து ரூபாய் இயக்கம் மனு
-
கால்கள் செயல் இழந்த நிலையில் பயணிகளை பாதுகாத்த டிரைவர்
-
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து
-
தேர்தல் விதிமுறைகளால் ஆடு விற்பனை மந்தம்