'காக்க வச்சு பழிவாங்கிட்டாரோ?'
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில், 2 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.
திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், காலை 10:15 மணிக்கே வந்து விட்டார். 10:30 மணிக்கு திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கலெக்டர் பிரதாப் வர காலதாமதம் ஏற்பட்டது. அவர் வந்த பிறகு, ஒரு மணி நேரம் தாமதமாக, பகல் 11:30 மணிக்கு திறப்பு விழா நடந்தது.
அங்கிருந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர், 'எப்பவுமே நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் வந்து காத்திருப்பாங்க... நம்ம எம்.எல்.ஏ., தான் லேட்டா வருவாரு.
'ஆனா, இந்த ஆஸ்பத்திரி திறப்பு விழாவுக்கு நம்ம எம்.எல்.ஏ., சீக்கிரமா வந்துட்டாரு... இப்ப, கலெக்டர் லேட்டா வந்து எம்.எல்.ஏ.,வை ஒரு மணி நேரம் காக்க வச்சு பழிவாங்கிட்டாரோ...?' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் சத்தமின்றி சிரித்தனர்.
மேலும்
-
அரகண்டநல்லுார் கமிட்டியில் ஒரே நாளில் ரூ.2 கோடி வர்த்தகம்
-
கும்பமேளா புகழ் மோனாலிசாவின் திருமணம் 'லவ் ஜிஹாத்' சம்பவம்: இயக்குநர் சனோஜ் மிஷ்ரா
-
டீ தர மறுத்ததால் மருமகள் கொலை: கேரளாவில் மாமியார் கொடூரம்
-
கூரியர் அலுவலகத்தில் புகையிலை பார்சல் பறிமுதல்
-
பா.ம.க.,வில் போட்டி; கவலைப்பட வேண்டாம் திலகபாமா கருத்து
-
மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கணவன் கைது திருநெல்வேலியில் தொடரும் கொடூரம்